Sunday, October 12, 2014

இன்று முதல் (அக்1) பஹ்ரைனுக்கு செல்ல ஆன்லைன் விசா!

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் பயன் பெறும் விதமாக‌ விசா அனுமதியினை எளிதாக்கியுள்ளது. சென்ற‌ மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு அமைச்சரவை கூட்டத்தில் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று முதல் (அக்டோபர் 1 தேதி) நடைமுறைக்கு வந்தது.
இதன் மூலம் நேற்று முதல்(அக்டோபர்) விசாவிற்கான விண்ணப்பங்கள் மின்னணுமயமாக்கப்பட்டு இந்தியா உட்பட 35 நாடுகளுக்கு இந்த வசதிகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது இந்தியர்கள் பஹ்ரைனுக்கு (http://www.evisa.gov.bh/VisaBhrnats.html) ஆன்லைனில் விசா பெறலாம்.பஹ்ரைனுக்கு எளிதான ஆன்லைன் விண்ணப்பம் மூலம் விசா பெறும் நாடுகள் 100ஐ தாண்டியுள்ளது

மேலும், வரும் 2015ஆம் ஆண்டு முதல் இந்திய மக்கள் பஹ்ரைனில் அதிக நாட்கள் தங்கமுடியும். புதிய திட்டத்தின்கீழ் ஒரு மாதத்திற்கு அளிக்கப்படும் இந்த விசா அனுமதியினை ஒருவர் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளமுடியும்.

இதுதவிர பல நுழைவு விசாவும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஹ்ரைனுக்கு ஏராளமான இந்தியர்கள் பயணம் மற்றும் வேலை நிமித்தமாக வருவதால் இந்த புதிய திட்டம் அவர்களுக்கான பயணத்தை எளிதாக்கும் என்று கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment