Thursday, October 30, 2014

ஒரு முஸ்லிம் மேல் உள்ள ஐந்து உரிமைகள்

முஸ்லிம்களாகிய நமக்கு மற்றவர்கள் மீது குறிப்பிட்ட உரிமைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவற்றை உங்கள் தினசரி வாழ்வில் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நிறைவேற்றுகிறீர்களா?
நபி (ஸல்) அவர்கள், கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் மேல் ஐந்து உரிமைகள் உள்ளன.  அவர் ஸலாம் கூறினால், பதில் கூறுதல், அவர் நோயுற்றிருந்தால் பார்க்கச் செல்லுதல், அவர் மரணமடைந்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல், அவர் தும்மினால் ‘யர்ஹமுக் அல்லாஹ்’  (அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக) என கூறுதல். [புகாரி, முஸ்லிம்]
இவ்வார மைய வசனத்தில் அல்லாஹ் (சுபஹ்): ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். [அல் குர்’ஆன் 23:1] என கூறுகிறான்.  நாம் வெற்றிகரமான நம்பிக்கையாளர்களாக இருப்பதற்கு இந்த ஐந்து அழகிய உரிமைகளை அறிந்து அவற்றை கடைபிடிப்பதிலிருந்து தொடங்குவோம், இன் ஷா அல்லாஹ்!

தனிமனித மற்றும் சமுதாய கடமைகள்
 சிலர், ‘மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸிலுள்ள ஐந்து உரிமைகளையும் நிறைவேற்றாவிட்டால் நாம் பாவம் செய்தவர்களாகி விடுவோமா?’ என கேட்கிறார்கள்.  அதற்கு பதில்: முஸ்லிம்களாகிய நமக்கு ஒருவர் மேல் ஒருவருக்குள்ள உரிமைகள் பல உள்ளன, அவற்றில் சில தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியவை (ஃபர்த்), அவற்றை நிறைவேற்றாவிட்டால் அது உங்கள் மீது ஒரு பாவமாக இருக்கும்.  மற்ற உரிமைகள் சமுதாயம் சார்ந்தவை (ஃபர்த் கிஃபாயா). இவற்றை சமுதாயத்தில் ஒரு பகுதியினர் செய்தால் போதும், அனைவர் மீதும் கடமை இல்லை.

செயல் குறிப்புகள் 
இந்த ஐந்து உரிமைகளையும் தினசரி செயல்பாடுகளாக மாற்றுவோம்.

1. ஸலாமுக்கு பதில் கூறுங்கள் !
தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால், பதில் கூறுவது உங்களுக்கு கடமை.  யாராவது ஒரு முழு குழுவினருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் கூறினால், அந்த குழுவிற்கு பதில் கூறுவது கடமையாகிறது, இதன் பொருள், குழுவிலுள்ள ஒருவர் பதில் கூறினால்மற்றவர்கள் மீது பாவமில்லை.  ஆனால்அனைவரும் பதில் கூறினால்அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றியவர்கள் ஆவார்கள்.[அல் மவ்ஸூ’ஆ அல் ஃபிக்கியாவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்]. அதனால் ஸலாமுக்கு பதில் கூறுவது மிகக் குறைந்தபட்ச கடமை.
ஸலாம் கூறுவதன் மூலம் சுன்னத்திற்கு புத்துயிர் கொடுத்து, பெரும் நன்மைகளைப் பெற்றால் என்ன?  அல்லாஹ்வின்தூதர் (ஸல்அவர்கள்கூறினார்கள்:நீங்கள்இறைநம்பிக்கைகொள்ளாதவரையில்சொர்க்கத்தில்நுழையமுடியாது.நீங்கள்ஒருவரைஒருவர்நேசிக்காதவரை (முழுமையானஇறைநம்பிக்கையாளராகமுடியாதுஒன்றைஉங்களுக்குநான்அறிவிக்கட்டுமா?அதைநீங்கள்செயல்படுத்தினால்ஒருவரைஒருவர்நேசம்கொள்ளலாம்.உங்களிடையேசலாத்தைப் பரப்புங்கள்.இதைஅபூஹுரைரா (ரலிஅவர்கள்அறிவிக்கிறார்கள்.  [முஸ்லிம்]
செயல்: பிறரிடமும் தங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால் பதில் கூற வேண்டும் என்ற மற்ற முஸ்லிம்களுடைய உரிமையைப் பற்றியும், முதலில் ஸலாம் கூறவும் ஊக்கமளியுங்கள்!

2. நோயாளிகளிடம் நலம் விசாரியுங்கள்.
நோயாளிகளைச் சென்று பார்ப்பது (அரபியில் ‘இயாதா’) ஒரு சமுதாயக் கடமை என்று மஜ்மூ ஃபதாவா வ ரஸாஇல் இப்னு உதைமீனில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இருப்பினும், இச்செயலைச் செய்வதில் ஏராளமான நன்மைகள் உள்ளன.  ‘ஒரு முஸ்லிம் தன்னுடைய முஸ்லிம் சகோதரரை  (அவர் நோயுற்றிருக்கும் போதுநலம் விசாரிக்கும்போது அவர் அமரும் வரை சுவனத்தின் கனிகளில் நடக்கிறார்.  அவர் அமர்ந்து விடும்போது அருள் அவரை சூழ்ந்து கொள்கிறதுஅது காலை நேரமாக இருப்பின் – அவர் மாலைப் பொழுதை அடையும் வரை  எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக துவா செய்வார்கள்.  அது  மாலைப்பொழுதாக இருந்தால்அவர் thaகாலைப் பொழுதை அடையும் வரை  எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக துவா செய்வார்கள்.’  [திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மது]
செயல்: நமக்குத் தெரிந்தவர்களை மட்டுமல்ல, தெரியாத நோயாளிகளைக் கூட நலம் விசாரிப்பது இஸ்லாம் சொல்லித் தரும் அழகிய பண்பு. காரணம், நாம் அல்லாஹ்வுக்காகவும், அவன் அளிக்கும் நற்கூலிகளுக்காகவும் அதைச் செய்கிறோம்.  நோயாளிகளை நலம் விசாரிக்கக் கூடியவர்களைக் கொண்டு உங்களுடைய சமுதாயத்தில் ஒரு குழுவை ஏற்படுத்துங்கள். குழந்தைகளுக்கும் அதற்கான நற்கூலியைப் பற்றி சொல்லிக் கொடுங்கள்.
கீழேயுள்ள துவாக்களை ஓதுவதன் மூலம் சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள்:
1.லா பஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்.
பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம். [புகாரி]
2. அம்மனிதருக்கு குணமளிக்க மூன்று முறை துவா செய்யுங்கள்: நபி (ஸல்) அவர்கள், ஸ’ஆத் பின் அபி வகாஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருக்கும் போது அவரைக் காணச் சென்றார்கள். அப்போது, யா அல்லாஹ்ஆதுக்கு குணமளிப்பாயாக’ என மூன்று முறை பிரார்த்தித்தார்கள். [புகாரி,  முஸ்லிம்]
3. உங்கள் வலது கையை நோயாளியின் மேல் வைத்து, நபி (ஸல்) அவர்கள் கூறியது போல்,  அத்ஹபல்பாஸ்ரப்பன்னாஸிவஷ்ஃபி அன்தஷ்ஷாஃபீலாஷிஃபாஇல்லாஷிஃபாவு(க்)ஷிஃபாஅன்லாயுகாதிருஸகமா.
பொருள் : இறைவாமனிதர்களின்எஜமானேதுன்பத்தைநீக்கிகுணப்படுத்துநீயேகுணப்படுத்துபவன்உனதுகுணப்படுத்துதலைத்தவிரவேறுகுணப்படுத்துதல்இல்லைநோயைமீதம்வைக்காதவகையில்முழுமையாகக்குணப்படுத்து! [முஸ்லிம்]

3. ஒரு முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொள்ளுங்கள்
இதுவும் ஒரு சமுதாயக் கடமை. ஆனால், அதிலுள்ள ஏராளமான நற்கூலிகளை நினைவில் கொண்டு அதில் கலந்து கொள்ள நீங்கள் உற்சாகம் பெற வேண்டும்.ஜனாஸா (பிரேத)த்தொழுகையில்பங்கேற்றஒருவர் (அதைஅடக்கம்செய்யும்வரைபின்தொடர்ந்துசெல்லவில்லையானால்அவருக்குஒருகீராத்” (நன்மையேஉண்டுஅதை (அடக்கம்செய்யும்வரைபின்தொடர்ந்தால்அவருக்குஇரண்டு “கீராத்கள் (நன்மைஉண்டு” எனநபி(ஸல்அவர்கள்கூறினார்கள்அப்போது “இரண்டு “கீராத்கள்என்றால்என்ன?” என்றுவினவப்பட்டதுஅதற்குஅவர்கள் “இரண்டு “கீராத்களில்மிகச்சிறியஅளவுஉஹுத்மலைஅளவாகும்” என்றுவிடையளித்தார்கள்.  [புகாரி]
குறிப்பு: ஜனாஸா தொழுவதின் நன்மை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் உண்டு.  ஆனால், பெண்கள் ஜனாஸா ஊர்வலத்தைப் பின்தொடரக் கூடாது.செயல்: ஜனாஸா தொழுகை தொழும் முறையைக் கற்றுக் கொண்டு, உங்கள் பகுதியில் ஜனாஸாவைப் பற்றி அறியும்போது தொழுகையில் கலந்து கொள்ளுங்கள். மேலும், அச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  அதனால் இறந்தவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்பவருக்கும் உதவியாக இருக்கும்.  . எத்தனை அதிகமான மூஃமின்கள் இறந்து போனவருக்காக துஆ செய்கிறார்களோ அத்தனை நல்லது.  மரணச் செய்தியைக் கேட்டவுடன், இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி’ஊன். (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவனிடமே நாம் திரும்ப வேண்டியுள்ளது) [அல் குர்’ஆன் 2:156] என்று கூறுங்கள்.

4. அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு திருமண அழைப்பாக இருந்தால், அதில் ஷரீ’’அத்திற்கு முரண்பாடாக எதுவும் நடக்கவில்லையென்றால், அழைக்கப்பட்டவருக்கு அதை ஏற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகி விடுகிறது.  உதாரணமாக, இசைக்கருவிகளுடன் கூடிய பாடல்கள், ஆண்களும், பெண்களும் கலந்து ஒரே இடத்தில் இருத்தல், போன்ற அனாச்சாரங்கள் இருந்தால் கலந்து கொள்ளத் தேவையில்லை.   திருமணமாக இல்லா விட்டால், பெரும்பாலான அறிஞர்கள் அதை ஏற்றுக் கொள்வது விரும்பத் தக்கது என கூறியுள்ளார்கள். இருப்பினும், நீங்கள் ஹலாலான காரணமா, எந்த இடத்தில், என்ன செயல்பாடுகள் நடக்கப் போகின்றன என்பதையெல்லாம் கவனித்து போவதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.
செயல்:  ஒரு திருமணத்திற்கு போவதற்கு முன், இசைக் கருவிகளுடன் கூடிய இசை இருக்குமா?  ஆண், பெண் விருந்தினர்களின் கலப்பு உண்டா என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம்.

5. யர்ஹமுகல்லாஹ்!
ஒருவர் தும்மினால், யர்ஹமுகல்லாஹ்(அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக) சொல்வது ஃபர்தா, ஃபர்த் கிஃபாயாவா (சமுதாயக் கடமையா) அல்லது ஒரு சுன்னத்தா (நபி வழி) என்பது பற்றி அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டு.  தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ்’ சொல்வதைக் கேட்டவர் யர்ஹமுகல்லாஹ் சொல்வது கட்டாயக் கடமை என்பது உறுதியான கருத்தாக இருக்கிறது.  நபி (ஸல்அவர்கள் தும்முவதை விரும்பினார்கள்கொட்டாவி விடுவதை விரும்பவில்லை.  அதனால்உங்களில் ஒருவர் தும்மிஅல்ஹம்துலில்லாஹ் சொல்லியதைக் கேட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் யர்ஹமுகல்லாஹ்என்று சொல்வது கடமையாகிறது. [புகாரி]
செயல்: நபி வழியில், மற்றவர்களுக்கும் அவர்கள் தும்மினால்  அல்ஹம்துலில்லாஹ் சொல்ல ஊக்கமளியுங்கள். neநீங்கள் யர்ஹமுகல்லாஹ் சொல்லத் தவறாதீர்கள்.  குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். நீங்கள்  யர்ஹமுகல்லாஹ் சொல்லியதைக் கேட்கும் தும்மியவர், யஹ்தியகுமஅல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும் (அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டி, உங்களுடைய நிலைமையை முன்னேற்றுவானாக) என்று சொல்லட்டும்.
யா அல்லாஹ்எங்களை மற்றவர்களுடைய உரிமைகளை நிறைவேற்றுபவர்களாகவும்மற்றவர்களையும் அதே போல் செய்யத் தூண்டுபவர்களாகவும் ஆக்குவாயாக.  ஆமீன். 
குறிப்பு: இன்னொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறுவதும் ஒரு உரிமை என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள்: “ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் மேல் ஆறு உரிமைகள் உள்ளன” என கூறினார்கள்.  “அவை என்ன இறை தூதர் அவர்களே?” என கேட்கப்பட்டது.  அதற்கு அவர்கள், “அவரை சந்தித்தால் ஸலாம் கூறுங்கள்,  அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் அறிவுரை கேட்டால், உண்மையான அறிவுரை கூறுங்கள்,  அவர் தும்மிய பின் அல்லாஹ்வைப் புகந்தால் ‘யர்ஹமுக் அல்லாஹ்’  (அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக) என கூறுங்கள்.  அவர் நோயுற்றிருந்தால் அவரை சந்தித்து நலம் விசாரியுங்கள், அவர் மரணமடைந்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ளுங்கள்.” என்று கூறினார்கள். [முஸ்லிம்]
நீங்கள் பயனடைய பிரார்த்திர்க்கிறேன்.,
நன்றி : http://www.understandqurantamil.com

No comments:

Post a Comment