Thursday, October 23, 2014

தொழுகை

தொழுகை அதாவது சலாத் இந்த வார்த்தை எதை குறிக்கின்றது ?
என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்;

அல்லாஹ் உங்களுக்கு விளங்க வைத்தால் நீங்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்வீர்கள் :
ஒருதாய் தன் குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் வரை பால் கொடுப்பதை பூர்த்தியாக்க வேண்டும் இது இறைவனின் கட்டளை இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி;
கணவன் இறந்து விட்டால் மனைவி 4 மாதம் 10 நாள் இத்தா இருக்க வேண்டும் இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி;
விபச்சாரம் மானக் கேடானது இதை நெருங்காமல் இருந்தால் நீங்கள் தொழுகையாளி;
ஏனெனில் : 
( தொழுகை மானக் கேடானவற்றிலிருந்து உங்களைத் தடுக்கும் )
அல்லாஹ் ஏவியிருக்கும் நீதியையும் நீதத்தையும் கடைபிடிக்க வேண்டும்;
அவ்வாறு கடைபிடித்து , நீங்கள் மற்றவர்களையும் அவ்வாறு ஏவ வேண்டும் ; அவ்வாறு செய்வீர்களேயானால் நீங்கள் தொழுகையாளி;
ஓரிறைக் கொள்கையை உங்கள் பக்கத்து விட்டில் வசிக்கக் கூடிய நபர் பின்பற்றாவிட்டாலும் அவருக்கும் பயான் செய்வது தெளிவு படுத்துவது ஒரு உண்மையான முஃமினின் கடமை இது இறைவனின் உபதேசம் ; இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி.
அதே பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு நீங்கள் ஓரிரைக் கொள்கையை எத்தி வைக்கும் போது துன்பம் தருவார்கள் என்று அஞ்சினால் ( அதாவது காஃபிர்கள் விசமம் செய்வார்கள் என்று அஞ்சினால் தொழுகையை நீங்கள் சுருக்கிக் கொள்ளலாம் )
அநியாயம் உங்கள் கண் முன்னே நடக்கும்போது அதை வேடிக்கை பார்க்காது அல்லது நமக்கென்ன என்று போய்விடாமல் அதை தட்டி கேட்பது உங்கள் மீது கடமையாகும்; அவ்வாறு செய்தால் நீங்கள் தொழுகையாளி;
( ஏன் எனில் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிலை நிருத்துவது முஃமின்கள் விசுவாசிகள் மீது விதிக்கப்பட்டதாகும் )
இதுபோல் அல்லாஹ் உங்களுக்கு என்னற்ற சலாத்தை அதாவது தொழுகையை இந்தக் குர்ஆனில் ஏவியுள்ளான்;
இரவில் சொற்ப்ப நேரமேயன்றி நீங்கள் தூங்கக் கூடாது ;
தூக்கத்தை பெரிதாக எண்ணாமல் அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் கட்டளைக்காக     (அடிபணிந்து ) ஹுஜுது செய்து, நிற்க வேண்டும்;
எதற்காக ? அல்லாஹ்வின் வசனங்களையும் அவனின் கட்டளைகளையும் பற்றிச் சிந்திப்பதற்காக; 
அவ்வாறு நிலையாக நின்றால் நீங்கள் தொழுகையாளி;
அதில் உங்கள் ஒவ்வொருவரின் சக்திக்கு ஏற்றவாறு அதை நிலை நிருத்த வேண்டும்;அதை கடைபிடிக்க வேண்டும்; அதை பேணிக் கொள்ள வேண்டும்;
அதில் மத்திய நிலையை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்; பின்பற்ற வேண்டும் ( நடுத்தொழுகையை )
முதலில் குர்ஆனை சரிவர ஓதுங்கள் ; வாழ்க்கையில் எவ்வளவு தொழுகையை இதுவரை தவறவிட்டு விட்டீர்கள் என்பதை புரிந்து கொண்டு, தவ்பா செய்து ( அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோறி ) மீளுங்கள். அல்லாஹ் நாடினால் நேர்வழி படுத்துவான்.
LikeLike ·  · 

No comments:

Post a Comment