Friday, October 24, 2014

ஹதீஸ்-உடும்புக் கறி தடை செய்யப்பட்டதா?

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உடும்புக் கறி உண்ண  மறுத்த செய்தி ஸஹீஹுல் புகாரியில் பல அறிவிப்புகள் மூலம் நாம் காணலாம். அதில் ஒன்றில்
1273. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ் (ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா (ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் ‘நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் ‘உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை” என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
புஹாரி : 5391 காலித் பின் வலீத் (ரலி).
இந்த ஹதீஸில் காலித் பின் வலீத் (ரலி).அவர்கள் உடும்பு தடை செய்யப்பட்டதா? என்று கேட்டதற்கு, தடை இல்லை ஆனால் உடும்பு என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்லது அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்ததா என்பதை கொஞ்சம் அலசி பார்த்தால், பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரை அல்லாஹ் கோபத்தால் சபித்து அவர்களைப் பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளாக மாற்றிவிட்டான் என்ற செய்தியை ஸஹீஹுல் முஸ்லிம்யில் உள்ள அறிவிப்பு மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் கூறியதற்கு ஆதாரம்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் உடும்புகள் நிறைந்த பள்ளமான பகுதியில் வசிக்கிறேன். உடும்புதான் என் குடும்பத்தாரின் பொதுவான உணவாகும்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் அந்தக் கிராமவாசியிடம், "நபியவர்களிடம் மறுபடியும் கேள்" என்று சொன்னோம். அவர் மறுபடியும் கேட்டார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. இவ்வாறு மூன்று முறை நடந்தது.
மூன்றாவது முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்து, "கிராமவாசியே! அல்லாஹ், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் ஒரு கூட்டத்தாரைச் சபித்தான்; அல்லது கோபப்பட்டான். அவர்களைப் பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளாக மாற்றிவிட்டான். எனவே, இது (உடும்பு) அவர்களாயிருக்குமோ என்பது எனக்குத் தெரியாது. எனவே, அதை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென)த் தடை செய்யவுமாட்டேன்" என்று கூறினார்கள்.
முஸ்லிம்: 3949
ஆக, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் மனிதர்களா இருக்குமோ என அச்சத்தில் காரணத்தால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உடும்புக் கறி உன்ன மறுத்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
சிலர் மேற் கூறிய சம்பவத்தை சுட்டி காட்டி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்கு முழு முன் மாதுரி அல்ல என்று தவறாக கருத்தை பரப்பி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து எச்சரிகையாக இருந்து கொள்ளுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் தான் என்று சொல்லி புஹாரி : 5391ஹதீஸை ஆதாரமாக சுட்டி காட்டபட்டு இருந்தது..
இந்த கருத்தை சுட்டி காட்டிய நோக்கம்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங்களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லை, வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்ற கருத்தை மக்கள் மனதில் திணிக்க, உடும்புக் கரி மற்றும் வேற சம்பவங்களை முன் நிறுத்தி எழுதி வைத்து இருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணம் தான் என்பதை புரியவைப்பதற்காக இந்த பதிவை வெளிட்டேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்கு முழு முன் மாதுரி தான் ... அவ்வாறு தான் அல்குரானில் "ஹுஸ்வதுள் ஹசன" அழகிய முன்மாதுரி என்று அல்லாஹ் சொல்லி காட்டுகிறான். பாதிய ஏத்துக்குவேன்மற்றதை விட்டு விடுவேன் என்று சிந்தனை வழிகேடு. இது வஹி, இது வஹி இல்லை என்று பிரித்து பார்க்க முடியாது.
அல்லாஹ் தான் நம் அனைவரையும் தீய சிந்தனையில் இருந்து காப்பாற்றுவானாக !

No comments:

Post a Comment