குளத்தின் ஆழம் 6 அடி இருக்க வேண்டும். இதில் நன்கு உழவு ஓட்டி, ஏக்கருக்கு 300 கிலோ கல் சுண்ணாம்பு போட்டு, 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி, 2 டன் சாணத்தைக் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து, ஓர் அங்குலம் அளவுக்கு வளர்ந்த மீன் குஞ்சுகளை, குளத்தில் விடவேண்டும்.
ஒரு ஏக்கரில், 3 ஆயிரம் குஞ்சுகளை வளர்க்கலாம். 1,500 ரோகு, 600 மிர்கால், 300 கட்லா, 200 புல் கெண்டை, 100 போட்லா, 100 சிசி மீன் குஞ்சுகள் என்கிற விகிதத்தில், குஞ்சுகளை விட வேண்டும். ஒரு மாதம் வரை, தினமும் 3 கிலோ அளவுக்கு தீவனம் போட வேண்டும் (எண்ணெய் எடுத்த தவிடு 50%, கடலை பிண்ணாக்கு, சோளமாவு தலா 25% ஆகியவை கலந்த தீவனம்). 2-ம் மாதம் மீன்களின் சராசரி எடையில், 8% அளவுக்கு தினமும் இதே தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 3-ம் மாதம் 7%, 4-ம் மாதம் 6%, 5-ம் மாதம் 5%, 6-ம் மாதம் 4%, 7-ம் மாதம் 3% என்ற விகிதத்தில் தீவனத்தைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும்.

மாதம் ஒரு முறை 100 கிலோ சாணமும், 200 கிலோ கல் சுண்ணாம்பும் கரைக்க வேண்டும். கல் சுண்ணாம்பு, கிருமிநாசினியாகச் செயல்படும். 8 மாதங்களில் மீன்கள் வளர்ந்து விடும்.
அரையடி ஆழம், 5 அடி நீளம், மூன்றரையடி அகலத்துக்கு பள்ளம் பறித்து, அதில் ‘பாலிதீன் ஷீட்’ மூலம் சிறிய குளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, மீன்களை விட்டு. வாடிக்கையாளர்கள் மீனை எடைபோட்டு, விற்பனையாளர்களே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறார்கள். நியாயமான விலை, உயிர் மீன்கள் என்பதால், மீன்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
நன்றி : பசுமை விகடன் 10 Nov, 2014
No comments:
Post a Comment