Saturday, November 1, 2014

ஹதீஸ்

ஒரு கிராமவாசி நபி (ஸல்)
அவர்களிடம் வந்து கேட்டார்கள்.
யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில
கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன்
நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
1.நான் பணக்காரனாக என்ன செய்ய
வேண்டும் ?
· நீங்கள் போதுமென்ற
தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள்.
பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக்
கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3. நான் கண்ணியமுடையவனாக வாழ
வழி என்ன ?
· ஜனங்களிடம்
கையேந்துவதை விட்டும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்
4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக
விரும்புகிறேன்.
·
ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம்
ஏற்படட்டும். நல்ல மனிதராக
ஆகி விடுவீர்கள்.
5. நான் நீதியுள்ளவனாக
விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ,
அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன
வழி ?
· அல்லாஹ்வின்
மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
7. அல்லாஹ்வுடைய தர்பாரில்
விசேஷ அந்தஸ்து கிடைக்க
விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் )
செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன
வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன்
இருங்கள்
9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான
பொருளாதாரத்தை உண்பதை விட்டும்
தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10. முழுமையான ஈமானுடையவராக
என்ன வழி ?
· நற்குணமுடையவராக
ஆகி விடுங்கள்
11. கியாமத்தில் அல்லாஹ்விடன்
பாவமற்றவனாக பரிசுத்த நிலையில்
சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன்
குளித்து விடுங்கள்
12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ
மன்னிப்புத் தேடுங்கள்
13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம்
ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள்.
பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என்
குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில்
மறைத்து விடுங்கள்
15. உலகத்தில்
இழிவடைவதை விட்டும்
பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும்
தவிர்ந்து கொள்ளுங்கள்.
இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய
பிரியனாக வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடி
யவர்களை பிரியபடுங்கள்
17. அல்லாஹ்,
ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக
வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக
கடைப்பிடியுங்கள்
18. நான் இறைத் தொடர்புடையவனாக
ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக
என்ணி வணங்குங்கள் ( அல்லது )
அல்லாஹ் உங்களை பார்ப்பதாக
எண்ணி வணங்குங்கள்
19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்
கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்
20. நரகத்தின் நெருப்பை குளிர
வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின்
மீது பொறுமையாக இருப்பது
21. அல்லாஹ்வுடைய
கோபத்தை எது குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம்
செய்வது – சொந்த
பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய
தீமை எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்
23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய
நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய
கோபத்தை விட்டும் தவிர்த்துக்
கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம்
கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது –
கன்ஸுல் உம்மால் )

No comments:

Post a Comment