தூய்மை ஈமானில் பாதி நிலையாகும். தூய்மை அற்றவனின் தொழுகை இறைவனால்
ஏற்றுக்கொள்ளப்படாது. திருக்குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்.
ஒளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும்.
ஏற்றுக்கொள்ளப்படாது. திருக்குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்.
ஒளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ.....
அல்லாஹ் கூறுகிறான்: “மூஃமின்களே! நீங்கள் தொழச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கை வரை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்………. (அல்குர்ஆன்-5:6)
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَة أَحَدِكُمْ حَتَّى يَتَوَضَّأَ .بخا...
“உங்களில் ஒருவருக்கு ஓளூ நீங்கி விட்டால் ஓளூச் செய்யும் வரை அவர் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி. 6954
இவ்வாறு ஒளூவை பற்றி நிறைய ஹதீஸ்கள் காணக்கிடைக்கன்றன. சுமார் 200 மேற்பட்ட
ஹதீஸ் குறிப்புகள் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா மற்றும் அபூதாவூது போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளன. இத்;தூய்மை பற்றி அனேக ஹதீஸ்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான செய்திகளை தாங்கியவைகளாகவே உள்ளன. மேலும் ஒளூ பற்றிய அதிக விபரங்கள் தேவைபடுவோர் மேற்கண்ட ஹதீஸ்கள் மற்றும் புலூஹுல் மராம் தொகுப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment