Thursday, November 20, 2014

ஹதீஸ்

ஹழ்ரத் ஜாபிர் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள்,
ரஸூல்லுல்லாஹ் ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சபையில் ஒருவர் வந்து, சலாம் சொல்லி, யா ரஸூல்லுல்லாஹ், உலகம் என்றால் என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு ரஸூல்லுல்லாஹ், உலகம் என்பது தூக்கத்தில் காணப்படும் கனவாகும்,
அதில் வாழ்பவர்கள், நற்செயல்களின் மூலம் நற்கூலி பெறுபவர்களாகவும், தீய செயல்களை உடையவர்கள் தண்டிக்கப்படுபவர்களாகவும் உள்ளனர் என்று கூறினார்கள்.
                                                                                                                                                              'மறுமை' என்றால் என்ன? என்று அவர் கேட்டார்.
அதுதான் நிரந்தர வாழ்க்கை, ஒரு கூட்டத்தினர் நரகத்திலும் பிறிதொரு கூட்டத்தினர் சுவனித்திலும் இருப்பார்கள். அதுதான் நிரந்தர வாழ்க்கை , ஒரு கூட்டத்தினர் நரகத்திலும் பிறிதொரு கூட்டத்தினர் சுவனத்திலும் இருப்பார்கள், என்று என்றார்கள்.
                                                                                                                                                                    'நரகம் ' என்றால் என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், "உலகத்தை தேடுபவர்களுக்கு அதன் பலனை நிந்தரமாக கொடுத்தல் ஆகும்" என்று கூறினார்கள்.
சுவனம் என்றால் என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், "மறுமையை தேடுபவர்களுக்கு அதனை நீரந்தரமாக நீங்காத அளவுக்கு கொடுத்து விடுவதாகும்" என்று கூறினார்கள்.
                                                                                                                                                          இந்த உம்மத்துக்கு நன்மை தரக்கூடியது எது? என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், "அல்லாஹ்வை .வழிபடுவது ஆகும்" என்று கூறினார்கள்.
உடனே அவர், அதில் மனிதன் இருக்க வேண்டிய முறை யாது? என்று கேட்டார்.
அதற்கு ரஸூல்லுல்லாஹ், "காபிலாவை தேடுபவனைப் போன்று நிலையில்லாதிருக்க வேண்டும்" என்று விடையளித்தார்கள்.
அதற்கு அந்த மனிதர், அதன் அளவுதான் என்ன ? என்று கேட்டார்கள் .
அதற்கு நபியவர்கள், காபிலாவை தவறவிட்டவனின் அளவே" என்று நபியவர்கள் விடையளித்தார்கள்.
அப்போதவர் , இம்மைக்கும் மறுமைக்கும் இடையே உள்ள இடைவேலை எவ்வளவு ? என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், "கண் சிமிட்டும் நேரமே" என்று கூறினார்கள்.
பின்னர், அம்மனிதர் அங்கிருந்து போய் விட்டார். 
அப்போது அண்ணல் நபி ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அங்கு இருந்த சபையினரை நோக்கி, "இவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்களுக்கு துறவை உண்டாக்கவும் , மறுமையில் உங்களுக்கு ஆவலை உண்டாக்கவும் உங்களிடம் வந்தார்கள்" என்று கூறினார்கள்.
காபிலா என்றால் அல்லாஹ்வை தேடுவது உள்ளத்தில் அல்லாஹ்வை தவி எதையும் வைக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment