• குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating Systemத்தை புதுப்பிக்கவும்.
• மடிக்கணினிக்கு பேட்டரி மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் என்றநிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். உதாரணமாக, வெளியூர் செல்லும் நாட்களில்.
• மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்தலாம்.
• மடிக்கணினிக்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger) பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High Power Flow) காரணமாக உங்களுடைய மடிக்கணினி செயலிழந்து போகலாம்.
• மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low Battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லோ பேட்டரி சிக்னல் கிடைத்த பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.
• மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.
• மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை நாமாகவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
• ஒரு மடிக்கணினியில் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்தக் கூடாது. ஒரு மடிக்கணினிக்கான பேட்டரியை அதே மடிக்கணினியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment