Monday, November 3, 2014

காமராஜரின் கோபம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டபின் காமராஜர் ஒருமுறை நாகப்பட்டினம் அருகேயுள்ள திருத்துறைப்பூண்டிக்கு வந்தார். அப்போது காமராஜர் வாழ்க என்ற கோஷம் மேலிருந்து கேட்க, நிமிர்ந்து பார்த்தார் காமராஜர்.

சாலையோர மின்கம்பத்தில் ஏறி நின்றுகொண்டு ஒரு தொண்டர் கோஷமிட்டு கொண்டிருந்தார். காமராஜருக்கு பகீரென்றது. ஏய் கிறுக்கா...நான் வாழ்வேன். நீ போய் சேர்ந்துடுவே. இறங்கு முதலில்...என்று கோபமாய் கூற விடுவிடுவென்று கீழே இறங்கிவிட்டார் தொண்டர்..

No comments:

Post a Comment