Monday, November 3, 2014

பர்தாவின் பலன்கள்....

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள்ää அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)
”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்: 33:53)
இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும். மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.
ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது ”அதுவே உங்களின் இதயங்களுக்கும் அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53)
என்று குறிப்பிடுகிறான். இன்னும்அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)
”நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி(ஸல்)அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவேலர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களையும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி,முஸ்லிம்)
இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம்,உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.
பெண்களைப் பொறுத்தவரை அவளுடன் துணை யாகச் செல்லக்கூடிய திருமண உறவு தடை செய்யப்பட்ட ஆண் இருக்கவேண்டும். அதாவது கணவன்,தந்தை மகன்,சகோதரன் போன்றவர்கள், அல்லது பால்குடி சகோதரன்,தாயின் கணவன் அல்லது கணவனின் மகன் போன்றவர்கள் உடன் இருக்கவேண்டும்.
”நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை பிரசங்கம் செய்யும் போது, திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட ஆண் அவளுடன் இருந்தேயன்றி எந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது. தனக்குத் திருமண உறவு தடுக்கப்பட்டுள்ள ஆண் துணையின்றி எந்த ஒரு பெண்ணும் தனிமையில் பயணம் செய்யக்கூடாது.’ என்று கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத் தூதர் அவர்களே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகத் தனியாகச் சென்றிருக்கிறாள். நானோ இன்ன யுத்தத்தில் பங்கெடுப் பதற்காக உள்ளேன்.’ எனக் கேட்டார். அதற்கு ‘நீ சென்று உன் மனைவியுடன் ‘ஹஜ்’ செய்துகொள்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment