Friday, November 28, 2014

ஹதீஸ்-குளிர் கால பயிற்சிக் கூடம்....

குளிர் காலம் வந்து விட்டது! நீங்கள் உலகில் எந்த பாகத்தில் இருக்கிறீர்களோ அதைப் பொறுத்து,
நீங்கள் குளிர் காலம் எப்போது வரும் என காத்திருப்பவர்களாகவோ, அல்லது குளிர் காலம்
வந்து விடப்போகிறதே என அஞ்சுபவர்களாவோ இருப்பீர்கள்.


பெரும்பாலான உஷ்ணப்பிரதேசங்களில் குளிர் காலம் என்பதே இருக்காது, அல்லது மிகவும் இனிமையான சீதோஷ்ண நிலை இருக்கும். உலகின் வட பகுதியில் குளிர் காலம் மிகவும்
பயங்கரமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், ‘குளிர் கால சோகம்’ என்ற ஒன்றினால் பலர் மன
அழுத்தத்தினாலும், கவலையினாலும் அவதிப் படுவார்கள். ஆனால், முஸ்லிம்களாகிய நமக்கு குளிர் காலம் ஒரு பயற்சிக் கூடம் போன்றது. எப்படி?


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விசுவாசிக்கு குளிர் காலம் மிகச் சிறந்த பருவம். அதன் நீண்ட இரவுகள் அவர் தொழுவதற்கும், குறைவான பகல்கள் நோன்பு வைப்பதற்கும் வசதியானவை.” [அல் ஹைதமி]


நபி (ஸல்) “குளிர் காலம் வணக்க வழிபாடுகள் செய்பவர்களுக்கு ஒரு பரிசு” என கூறியதாக உமர் பின் அல் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள் [அஹமது]


பயிற்சி 1: நோன்பின் மூலம் பொறுமை குளிர் காலத்தில் நாம் செய்யக் கூடிய மிக எளிய செயல்
நோன்பு வைப்பது தான். பகல் நேரம் மிகக் குறைவாக இருப்பதால், நோன்பு வைப்பதால் எந்த சிரமமும்
இருப்பதில்லை. “குளிர்காலத்தில் நோன்பு பிடிப்பது எளிதான வெகுமதி.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  [அஹமது]


நோன்பு நாம் பொறுமையாக இருப்பதற்கு பயிற்சி அளிக்கிறது. மேலும், தாமதப்படுத்தப்பட்ட
திருப்திக்கும் – அதாவது, நமக்கு கிடைக்கும் வெகுமதி, நாம் விரும்பும் போதெல்லாம் கிடைப்பதை விட தாமதமாக கிடைப்பது நலம். பொறுமைக்கு அல்லாஹ்வின் வெகுமதி சுவனத்தைத் தவிர
வேரொன்றுமில்லை. அல்லாஹ் குர்’ஆனில் கூறுகின்றான், “(நபியே!) நீர்கூறும்: “பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக்கணக்கின்றிப் பெறுவார்கள்.” [அல் குர்’ஆன் 39:10]


இப்படி, நோன்பும், குளிர் காலமும் நமக்கு பொதுவாக பொறுமையையும், நம் உணவை உண்ணுவதற்கு
பொறுத்திருக்கவும் கற்றுக் கொடுக்கின்றன. இது ஒரு முக்கியமான வாழ்க்கை கல்வி, இதனால்
நமக்கு எந்த கேள்வி கணக்கும் இல்லாமல், சுவனம் கிடைப்பது மட்டுமல்லாமல், இவ்வுலகிலும், நமக்கு பயன் கிடைக்கும். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,


அல்லாஹ்வின்பாதையில் (அறப்போருக்குச்செல்லும்) ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்றால் அவரது முகத்தை அல்லாஹ் நரகநெருப்பை விட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி டுகிறான். இதை அபூசயீத்அல்குத்ரீ (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்..” [புகாரி, முஸ்லிம்] 


அவர்கள் மேலும் கூறினார்கள்: “நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்”
எனஅல்லாஹ்கூறுகின்றான்.


நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவர் மகிழ்ச்சி அடைவார்;
அல்லாஹ்வைச் சந்திக்கும் போதும் மகிழ்ச்சிஅடைவார். இந்தஹதீஸை அபூஹுரைரா (ரலி)
அவர்களும்அபூசயீத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். [புகாரி, முஸ்லிம்] 


அதனால், உங்களுடைய விடுபட்ட நோன்புகளை எடுத்து இப்போது நிறைவு செய்யுங்கள், அல்லது கூடுதல் நவாஃபில் நோன்புகள் நோற்கலாம், ஆனால், குளிர் காலத்தில், உங்களை நரகநெருப்பிலிருந்து காத்துக் கொள்வதற்கும், சுவனத்தை நெருங்குவதற்கும், அல்லாஹ்வின் கோபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கும், அவனுடைய திருப்தியைப் பெறுவதற்கும், உங்களுடைய பொறுமையின்மையிலிருந்து விடுபட்டு பொறுமையைப் பழகுவதற்கும், அதிகமதிகமாக நோன்பு நோற்கத் தவறாதீர்கள்!

பயிற்சி 2: இரவில் தொழுது அல்லாஹ்விடம் கேட்பதற்குக் கற்றுக் கொள்ளுதல் ரமலானுடைய
நோன்புக்கு அடுத்தபடியாக முஹர்ரத்தில் (இவ்வருடம் குளிர் காலத்தில் வந்துள்ளது)  நோன்பு நோற்பது சிறப்பாக இருப்பது போல், கடமையான தொழுகைகளுக்கு அடுத்த சிறப்பான  தொழுகை இரவுத் தொழுகைகளே! [புகாரி, முஸ்லிம்]. 


நீங்கள் நோன்பு வைக்கும் நோக்கத்துடன் ஸஹர் செய்ய கண்விழிக்கும் நேரம், தஹஜ்ஜுத் தொழுவதற்கு மிகச் சிறப்பான நேரம். அந்நேரத்தில் இரண்டு ரக்’அத்துக்களாவது தொழ முயற்சி செய்து, அல்லாஹ்விடம் அதிகமான துவா கேளுங்கள். இமாம் ஷாஃபி (ரஹ்), தஹஜ்ஜுத் தொழுகையில் கேட்கும் துவா அதன் இலக்கை நேராகத் துளைக்கும் அம்பு போன்றது, என்று கூறினார்கள்!

மேலும், கியாமுல் லைல் அல்லது இரவுத் தொழுகையை தஹஜ்ஜுத் நேரத்தில்  தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத் தரக்கூடியதாக இருந்தாலும், அப்போது தான் தொழ வேண்டுமென்பதில்லை. குளிர் காலத்தில் இஷா முன்னிரவிலேயே வந்து விட்டாலும், படுக்கைக்குச் செல்வதற்கு இன்னும்
இரண்டு மணி நேரம் இருந்தாலும், இஷா தொழுகைக்குப் பின் 2, 4, 6, 8 என்று கூடுதல் தொழுகைகளைத்
தொழலாம்.  நபி (ஸல்) அவர்கள், ‘தஹஜ்ஜுத் தொழுகையை விடாதீர்கள், ஏனென்றால், உங்களுக்கு முன் சென்ற நல்லோர்கள் அல்லாஹ்வை நெருங்குவதற்கும், தங்கள் பாவங்கள்
மன்னிக்கப்படுவதற்கும், பாவங்களிலிருந்து காத்துக் கொள்வதற்கும், பின்பற்றிய வழி அது. [திர்மிதி] இரவுத் தொழுகையை விட  சிறப்பானதாக நாம் செய்யக்கூடியவை மிகக் குறைவாகவே உள்ளன. குளிர் காலம் தான் இரவுத் தொழுகைக்கு நமக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கூடம்!


குளிர் காலத்தில் மிகச் சிறந்த  இரு வழிபாடுகளை இணைக்க முடியும். அத்தோடு, குளிர்ந்த நீரில்
ஒளு செய்வது, குளிரில் வேலை செய்வது, போன்ற இன்னும் பல உண்டு. குளிர் காலம்,  நமக்கு பொறுமையைக் கற்றுத் தருகிறது. அல்லாஹ் தான் வானங்கள், பூமிகள் அனைத்திற்கும் அதிபதி என்பதையும், அவன் நாடியதைச் செய்வான் என்பதையும் கற்றுத் தருகிறது. மேலும், இதன்  மூலம், அல்லாஹ்வுடைய கம்பீரத்தையும், கண்ணியத்தையும்  நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது.

இப்னு ரஜப் அல் ஹம்பலி (ரஹ்) குளிர் காலத்தைப் பற்றி, “குளிர் காலம், ஒரு விசுவாசியின் வசந்த காலம், ஏனென்றால், அவன் கீழ்ப்படிதல் என்ற தோட்டத்தில் மேய்ந்து, வழிபாட்டின்  வயல்களில் அலைந்து, நற்செயல்களின் தோட்டங்களில் தன் இதயத்தை விடுவித்து விடும் சமயம் இது –வசந்தகாலத்தில் கால்நடைகள் அடர்ந்த புல்வெளிகளில் மேய்வது போல். அவை அச்சமயத்தில் கொழுத்து, (குளிர் கால சிரமங்களிலிருந்து) அவைகளின் உடல்நிலை சீராகும். அதே போல, குளிர் காலத்தில், அல்லாஹ் அவனுக்கு எளிதாக்கிய கீழ்ப்படிதலால், ஒரு விசுவாசியின் மார்க்கம் சீர் செய்யப்படும்.” என கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment