Sunday, November 30, 2014

ஹதீஸ்-பிரார்த்தனை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! "அவசரப்படுதல்" என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு, "ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை" என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
நூல் : ஸஹிஹ் முஸ்லிம 5285..

No comments:

Post a Comment