அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீகண்ணித்திற்குரியவர்களே!
ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்:ஸல்மான் பார்ஸீ(ரலி)
பிரார்த்தனையில் ஹராமானதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்,மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப் படுவதில்லை. பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது, ஒன்றுக்குப் பலமுறைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும்..
நான் பிரார்த்தனை செய்தேன். அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறியுள்ளார்கள்... அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) நூல் :புகாரி...
ஸஜ்தாவின் போது; அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போதுதான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..
"அடியான்,அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான்.எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்"என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்:அபூஹீரைரா (ரலி) நூல் :முஸ்லிம் 744
No comments:
Post a Comment