திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காமராஜர் வெளியூர் சென்றிருந்தார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த காமராஜரை அழைத்துச் செல்ல திருமண வீட்டைச் சேர்ந்த ஒருவர் காத்திருந்தார்.
அவரிடம் காமராஜரின் கார் டிரைவர் ``திருமணம் நடக்கும் இடத்திற்கு எப்படி போக வேண்டும்'' என்று கேட்டார். உடனே அவர், ``நான் உங்கள் கார் முன்னாடி மோட்டார் சைக்கிளில் செல்கிறேன்.
என்று பின்னாடியே வாருங்கள்!'' என்று கூற டிரைவரும் ஒத்துக் கொண்டார். கார் புறப்பட்டது.
சிறிது நேரத்தில் காமராஜர் தன் டிரைவரைப் பார்த்து ``அது யார் நம்ம காருக்கு முன்னால் நமக்கு வழிவிடாத போறது?'' என்று கேட்டார்.
சிறிது நேரத்தில் காமராஜர் தன் டிரைவரைப் பார்த்து ``அது யார் நம்ம காருக்கு முன்னால் நமக்கு வழிவிடாத போறது?'' என்று கேட்டார்.
அதற்கு டிரைவர், ``திருமண வீட்டுக்குக்கு வழிகாட்ட நான்தான் அந்த நபரை காருக்கு முன்னாடி போகச் சொன்னேன்'' என்றார். உடனே காமரார் வண்டியை நிறுத்தச் சொன்னார். கார் நின்றதும் அந்த மோட்டார் சைக்கிள் நபர் திரும்பி வந்தார்.
அவரிடம் காமராஜர், ``நீங்க கல்யாண வீட்டுக்கு சீக்கிரம் போங்க, எனக்கு அந்த வீட்டுக்கு வர்ற வழி தெரியும். என் கார் முன்னால் போக வேண்டாம்'' என்று கடுமையாக கூறிவிட்டார்.
அவர் போய் மறைந்ததும் டிரைவர் பக்கம் திரும்பிய காமராஜர் ``திருமண வீட்டுக்கு வழி தெரியலைன்னா என்னைக் கேட்டால் சொல்கிறேன். இல்ல.. உள்ளூர்ல தெரிஞ்ச ஆள் இருக்காங்க!
அதை விட்டுட்டு அந்த ஆளை கார் முன்னாடி போகச் சொன்னால் நாம பந்தாவா போறோம்னு மக்கள் நம்மைப் பத்தி நினைப்பார்களே!'' என்று கூறினாராம் அந்த மக்கள் தலைவர்.
தன் கார் முன்னாடி ஒரு மோட்டார் சைக்கிள், வழிகாட்ட சென்றது கூட காமராஜர் விரும்பவில்லை.
No comments:
Post a Comment