Friday, November 28, 2014

ஹதீஸ்-நபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் !

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
நபி{ஸல்} அவர்கள் மீது ஸலவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு.
விசுவாசிகளே, நபி அவர்களின் மீது ஸலவாத்தும், சலாமும் கூறுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
யார் ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து கூறுகிறாரோ அவர் மீது பத்து அருட்களை அல்லாஹ் இறக்கிவைக்கிறான்.  இன்னும் அவரது பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவரது பத்து அந்தஸ்துகள் உயர்தபடுகின்றன. யார் என் மீது அதிகமாக ஸலவாத்து ஓதுகின்றாரோ அவர் எனக்கு நெருக்கமானவர் ஆவார்.                                                                                                                                                              நூல் : முஸ்லீம்
நபி{ஸல்}அவர்களின் பெயரை படித்தாலும் செவியுற்றாலும் அவசியம் அன்னாரின் மீது ஸலவாத்து கூறவேண்டும்,காரணம் யாரிடம் என் பெயர் கூறப்பட்டு என் மீது ஸலவாத்து கூறவில்லையோ அவரது மூக்கு மண்ணைத் தொடட்டும். இழிவு
அவருக்கு உண்டாகட்டும் எனக் கூறியுள்ளார்கள்.                                                நூல் : திர்மிதி
யாருக்கு முன் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத்து கூறவில்லையோ அவர்தான் கருமி,கஞ்சன் எனக் கூறியுள்ளார்கள். எப்பொழுதெல்லாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வை புகழ்ந்து போற்றிய பிறகு ஸலவாத்து கூறி துஆச் செய்யவேண்டும். துஆவை முடிக்கும்பொழுது அல்லாஹ்வை புகழ்ந்து நபியின் மீது ஸலவாத்து கூறுவது முக்கியம்.
துஆவில் எதுவரை நபி [ஸல்] அவர்கள் மீது நீங்கள் ஸலவாத்து கூறவில்லையோ அது வரை உங்களது துஆக்கள் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கி கொண்டிருக்கும். ஸலவாத்து கூறுவதால் துஆ அங்கீகாரம் பெறுகிறது என உமர் [ரலி] அவர்கள்
கூறுகிறார்கள்.
ஜூம்ஆ நாளன்று அதிகமாக ஸலவாத்து கூறுமாறு நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டார்கள்.பள்ளியில் {நுழைய} அருகாமையில் சென்றாலும், பள்ளியை விட்டு வெளியேறினாலும் ஸலவாத்து கூறுவது சிறந்ததாகும்.
ஸல்லலாஹு அலா முஹம்மத்
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான ஸலாவத்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹீம்மா(B)பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா(B)பாரக்(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்
நாம் அனைவரும் நபி{ஸல் }அவர்களின் பெயரை படித்தாலும் செவியுற்றாலும் ஸலவாத்து கூறி, அதன் நன்மையை பெற்று வாழ்வோமாக ! ஆமீன் !

No comments:

Post a Comment