Saturday, November 29, 2014

நீச்சத்தண்ணி கொடும்மா... ...

நீச்சத்தண்ணி கொடும்மா... ...
தூத்துக்குடி தொகுதியில் சட்டசபு இடைத்தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது பகல் ஒருமணி இருக்கும்.
வெயில் கொளுத்துகிறது. ஒரு குடிசை வீட்டில் இருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்தார் காமராஜர். தாய்மார்கள் வந்து அவரைக் கும்பிட்டார்கள்.
``காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்'' என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.பின்னர் ஒரு அம்மாவைப் பார்த்து ``நீச்சத் தண்ணி இருந்தா கொண்டாமா'' என்றார்.
உடனே அந்த ஏழைத்தாய், ``மோர் வாங்கித் தருகிறேன்'' என்றார். ``வேண்டாம் உங்கள் வீட்டிலே இருக்கிற நீச்சத் தண்ணியைக் கொண்டாம்மா'' என்று ஒரு டம்ளர் வாங்கி குடித்துவிட்டுத்தான் பயணத்தைத் தொடங்கினார்.

No comments:

Post a Comment