Thursday, December 18, 2014

ஹதீஸ்-இரண்டு நல்லறங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு
இரண்டு நல்லறங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைப்பிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.
(அவ்விரண்டில் முதலாவது): ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் பத்து முறை சுப்ஹானல்லாஹ் என்றும், பத்து முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், பத்து முறை அல்லாஹு அக்பர் என்றும் கூற வேண்டும். இவ்வாறு (ஒரு நாளின் ஐவேளைத் தொழுகைக்கும் சேர்த்து, (5 x 30)) நூற்று ஐம்பது முறை கூறுவதானது மறுமைத் தராசில் ஆயிரத்தி ஐநூறு நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன.
(அவற்றில் இரண்டாவது:) படுக்கையில் (இரவில்) தூங்கும் முன், முப்பத்தி நான்கு முறை அல்லாஹு அக்பர் என்றும், முப்பத்தி மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், முப்பத்தி மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும் கூறவேண்டும். இவ்வாறு கூறும் (34+33+33) நூறு திக்ர்களானது மறுமைத் தராசில் ஆயிரம் நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கை விரல்களால் (திக்ர் செய்து) எண்ணியதையும் நான் பார்த்தேன். (நபி (ஸல்) இவ்வாறு கூறியதைக் கேட்டதும், அவர்களிடம்) மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்விரண்டும் மிக எளிதாக இருந்தும் அதனைக் கடைபிடிப்பவர் ஏன் மிகக் குறைவாக உள்ளனர்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது, இதனைக் கூறுவதற்கு முன்னராகவே ஷைத்தான் அவரை உறங்க வைத்து விடுகிறான். அதுபோல் அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரிடம் அவன் (ஷைத்தான்) வந்து இதனைக் கூறுவதற்கு முன்னரே வேலைகளை நினைவூட்டி (எழுந்திருக்கச் செய்து) விடுகிறான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 4406

No comments:

Post a Comment