Tuesday, December 2, 2014

கணனியில் ஆண்ட்ராய்டு, வாட்ஸ்ஆப் எப்படி பயன்படுத்தலாம்???

ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்ஆப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஸ்மார்ட் போன் வாங்க முடியாதவர்களுக்கு இலவசமாக ஒரு மென்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கணனியில் ஆண்ட்ராய்டு, வாட்ஸ்ஆப் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். அதை டவுன்லோட் செய்ய வழிமுறைகள்.
1. கணனியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முதலில் (bluestacks) ப்ளூஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்த ஆண்டிராய்டு எமுலேட்டரை முதலில் டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
2. பதிவிறக்கம் செய்த ப்ளூஸ்டாக்ஸை கணனியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
3. ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும்.
4. ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்ஆப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும்.
5. வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் பதிவிறக்கம் ஆனதும் அதை ரன் செய்யுங்கள்.
6. அடுத்து உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ்ஆப்பில் என்டர் செய்யுங்கள்.
7. உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த ரெடியாகி விடும். 
ப்ளூஸ்டாக் என்பது வாட்ஸ்ஆப் மட்டுமல்ல கணினியில் ஆண்ட்ராய்டு போனாக செயல்படும். கால் பேசும் வசதியை தவிர மற்ற அனைத்து வசதிகளும் உள்ளது.

No comments:

Post a Comment