Monday, December 15, 2014

காசு இல்லாமல் போன காமராஜர்

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம். அதன் துவக்க விழாவிற்கு நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார். தற்போது பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாய் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

நேரு எந்திரத்தில் ஏறி நின்று, காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர். காமராஜர் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார். 
நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப்படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றவர்களுக்கு திகைப்பு, `பிரதமர் கூறியும் இவர் மறுக்கிறாரே' என்று.
நேரு சொன்னார் `காமராஜர் ஏன் மறுக்கிறார் என்கிற காரணம் எனக்குத் தெரியும். இந்த எந்திரத்தில் ஏறிநின்று போடும் காசுகூட இவரிடம் இப்போது இருக்காது' என்றார். பிறகு காமராஜருக்காகத் தாமே காசு போட்டு எடை பார்த்தார். அவர். கறைபடாத கரம், காசுக்கு ஆசைப்படாத மனம்!

No comments:

Post a Comment