Monday, December 8, 2014

தேன் இனிக்க காரணம் என்ன தெரியுமா...?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
தேன் இனிக்க காரணம் என்ன தெரியுமா...?
அறிவியல் ரீதியாக இல்லை.,        ஆய்வு ரீதியாகவும் இல்லை.,
மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதக்காரணம்..?. 

"தேனிக்கும் நபிகளாருக்கும்" இடையேயான அந்த அற்புதமான நிகழ்வு!!!
நபி (ஸல்); தேனியே! நீ  எப்படி தேனை உற்பத்தி செய்கிறாய்..?
தேனீ ; நாங்கள் பூஞ்சோலைகளுக்கு சென்று அங்குள்ள மலர்களின் மகரந்தத்துகள்களையும்,
அமுதினையும் எங்கள் வாய்களால் உறிஞ்சி சேகரித்து வைத்துக்கொள்வோம்.
சேகரிக்கப்பட்டதை எங்கள் கூட்டிலே உமிழ்ந்து(துப்பி) விடுவோம்.
நபி (ஸல்) ; சரி. பூக்கள் பலவகையுண்டு. சில பூக்களின் மகரந்தம் இனிக்கும். இன்னும் சில
பூக்களின் மகரந்தம் கசக்கும். இன்னும் சில புளிக்கும். ஆனால் எல்லாவற்றையும் கலந்து சாப்பிட்ட ஓர் தேனி அதை எப்படி மிகுந்த சுவையானதாகவும், அமுதமாகவும் மாற்றுகிறது........?
தேனீ சொன்னதாம்............,,, ?
தேனீ ; நபியே தாங்கள் சொல்வது சரிதான். பல இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்வற்றை சாப்பிட்டுவரும் எங்களுக்கு அல்லாஹ் தங்களின் மீது ஸலவாத் ஓத கற்றுக்கொடுத்தான்.
எங்கள் கூட்டை அடையும் வரை விடாது தங்கள் மீது ஸலவாத் ஓதிக்கொண்டே வருவோம்.
கூட்டை அடைந்ததும் நாங்கள் சேகரித்தவைகளை உமிழும்போது, ஸலவாத்தின் பரக்கத்தினால் அது சுவைமிகு அமுதமாய் மாறிவிடுகிறது.
கூறுங்கள் ஸலவாத்தை:

ﺍﻟﻠﻬﻢ ﺻﻠﻲ ﻋﻠﻲ
ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻲ ﺍﺑﻮﻳﻪ ﻭﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺑﺎﺭﻙ ﻭﺳﻠﻢ
நூல்; மஸ்னவி ஷரீஃப

No comments:

Post a Comment