Monday, December 29, 2014

துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
யா அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

யா அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!
அருளாளர்களுக்கு எல்லாம் மிகப்பொரும் அருளாளானே! ரமலானின் முதல் பத்து நாட்களை ரஹ்மத்துடைய பத்தாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆகையால் உன் ரஹ்மத்தை எங்களுக்கு வழங்குவாயாக
யா ரஹ்மானே! யா அல்லாஹ்வே நாங்கள் அனைவரும் பலவிதமான தேவையுடையவர்களாக இருக்கின்றோம் எங்களின் தேவைகளை நிறைவேற்றுவாயாக ரஹ்மானே! உன் ரஹ்மத்தின் பொருட்டால் எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக

No comments:

Post a Comment