மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி மொழிப் பிரச்சினை எழுந்த போது தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார் காமராஜர்.
"ஆட்சி மொழியை விரைவில் மாற்றிட முடியாது. ஒரு மாநிலத்தில் ஆட்சி மொழி அந்த மாநில மொழிதான் என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் இருப்பது ஆங்கிலம்தான். வடக்கே ஆட்சி மொழி நடப்பது இந்தியில் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் நடப்பது ஆங்கிலம்தான்''.
"ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டது போல், இந்தியையும் நாம் கற்றுக் கொள்ள இயலும், இந்தியும் வேண்டாம். ஆங்கிலமும் வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்''
நான் படிக்கவில்லைதான்- ஆனால் பூகோள சாஸ்திரம் தெரியும்
நான் படிக்கவில்லை என்று என்னிடம் கூறுகின்றனர். நான் எந்தச் சர்வ கலாச்சாலையிலும் பயின்றதாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், எனக்குப் பூகோள சாஸ்திரம் நன்கு தெரியும்.
எங்கெல்லாம் நதிகள் இருக்கின்றன. எங்கெல்லாம் ஏரிகள் இருக்கின்றன. என்பதெல்லாம் எனக்குத் தெரியும். எந்த நகரில் மக்கள் எம்மாதிரி தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்பதும் தெரியும்.
இவையெல்லாம் பூகோள சாஸ்திரமில்லை என்றால், நேர்கோடுகளையும் வளைந்த கோடுகளையும் கொண்டிருக்கும் புத்தகங்கள் தான் பூகோள சாஸ்திரம் என்றால், அது பற்றி நான் தெரிந்த கொள்ளாமலேயே இருந்து விடுகிறேன்.
எனது சொத்து எதுவோ அது மக்கள் சொத்து
எனக்கு என்ன பணம், காசு, சொத்தா இருக்கிறது, கவலைப்பட?
"எனக்கு வாரிசு கிடையாது. எனவே அவர்களுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க வேண்டியதில்லை. வாரிகளுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்ற நிர்பந்தமாவது எனக்கு உண்டா?
"எனக்கு கட்சிதான் சொத்து, அந்த கட்சி, மக்களின் சொத்து என்னையும் மக்களையும் பிரிக்க முடியாது''.

No comments:
Post a Comment