Sunday, December 14, 2014

மரணத்தை நினைவு கூறுவோம்

மரணத்தை நினைவு கூறுவோம்
மனிதனை படைத்த இறைவன் வாழ்வு, மரணம் என 2 நிலைகளை ஏற்படுத்தியுள்ளான்,,,,,
அதை தன் திருமறையில்,,,,,

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
மரணம் வந்தால்,,,,
ஒரு நொடி முந்தவோ, பிந்தவோ செய்யாது,,,,,
ஒருவர் மரணித்தால் 3 விஷயத்தை தவிர எதும் வராது,,,,
1. நிரந்தர தர்மம்
2. பயனுள்ள கல்வி
3. ஸாலிஹான குழந்தை செய்யும் துஆ
முஸ்லிம் 3084
இன்னும் இவ்வுலக மோகத்தை அழிக்கக்கூடிய மரண சிந்தனையை அதிகப்படுத்தி கொள்ளுங்கள் என நபி (ஸல் அ வர்கள் கூறினார்கள்,,
திர்மிதி 2229
இன்னும் நபி (ஸல் அவர்கள்,,,,,
யா அல்லாஹ்,,,
எனது மார்கத்தை எனக்காக சீர்படுத்து,, ஏனெனில் அதில் தான் எனது காரியங்களுக்கான பாதுகாப்பு உள்ளது,,
எனக்காக என்னுடைய மறுமை வாழ்க்கையை சீர்படுத்து,, ஏனென்றால் நான் அதன் பக்கமே திரும்பி செல்ல வேண்டியுள்ளது,,
மேலும் எல்லா நன்மைகளையும் அதிகம் பெற்றதாக என்னுடைய வாழ்வை ஆக்குவாயாக,
எல்லா தீங்குகளை விட்டும் ஓய்வு பெற்றதாக என் மரணத்தை ஆக்குவாயாக,,
என துஆ செய்துள்ளார்கள்,,
முஸ்லிம் 4897
எனவே இந்த துஆவை நாமும் கேட்டு நன்மையை அடைய முயற்சிக்க வேண்டும்,,,
மரணத்தை எண்ணி,
செயல்களை அழகாக்கி நன்மையை பெற முயற்சித்து,,
நன்மையான வழியில் செல்ல முயற்சிக்க வேண்டும்,,,,

No comments:

Post a Comment