கணிணியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது அனைவரும் அறிந்ததே. நாம் ஒரு புது லேப் டாப் அல்லது டெஸ்க்டாப் கம்பூடர் வாங்கும் போது இருக்கிற வேகம், கொஞ்ச நாள் கழிச்சு இருக்கிறது இல்ல.
இதுக்கு காரணம், கம்பியூட்டரில் இன்ஸ்டால் பன்னி இருக்க அப்ளிகேஷன்ஸ், டிஸ்க் ஸ்பேஸ் இவை அதிகமாகி இருக்கலாம். அடுத்தது வைரஸ் வந்து இருக்கலாம். இல்ல, உங்க கம்பியூட்டருக்கு மெய்ண்டனன்ஸ் தேவைப்படலாம்.
இது பலருக்குத் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்காக இந்த குறிப்புகள்…
Maintanance Task
இது ஒரு சிம்பில் விஷயம் தான். உங்க கண்ட்ரோல் பேனல்ல Troubleshoot ->System Security -> Run maintenance task கிளிக் பன்னா மெய்ண்டனன்ஸ் டாஸ்க்ஸ் ரன் ஆகும். இது முடிந்ததும், உங்கள் கம்பியூட்டர் கொஞ்சம் வேகமானதை நீங்கள் உணர முடியும்.
Defragment
இதுவும் பலருக்கு தெரிந்தது தான். ஹார்ட் டிஸ்கில் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் ஒழுங்கில்லாமல் சேவ் ஆகும்.
இதை ஒழுங்கு படுத்தும் முறை தான் Disk Defragment.
இதுக்கு Searchல, Disk Defragmentனு டைப் செய்தால் Disk Defragment டயலாக் பாக்ஸ் ஓபன் ஆகும்.
இதில் வரிசையாக கம்பியூடரில் உள்ள டிரைவ்கள் தெரியும்.
இதில் ஒவ்வொரு டிரைவாக கிளிக் செய்து, முதலில் Analyze பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
Analayze முடிந்தவுடன் Optimize பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த Defragment-ஐ Auslogics Disk Defragn என்ற அப்ளிகேஷனைக் கொண்டும் செய்யலாம்.
இந்த அப்லிகேஷன் Defragment-ஐ விண்டோஸை விட வேகமாகச் செய்யும்.
இதே போல் Disk Clean Up என்கிற விண்டோஸ் வசதி மூலம் தேவையில்லாத தகவல்களை அழித்து உங்கள் ஹார்டிஸ்கில் இடத்தை பெற முடியும்.
இதையும் Searchல் டைப் செய்தால் Disk Clean Up என்கிற விண்டோ ஓபன் ஆகும்.
அதில் எந்த டிரைவில் கிளீன் அப் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து OK கொடுத்தால் எவற்றை எல்லாம் அழிக்கலாம் என்ற பட்டியல் தோன்றும்.
அதில் தேவையற்றவற்றை மார்க் செய்து டெலிட் கொடுத்தால் உங்களுக்கு சிறிதளவு நினைவகத்தில் இடம் கிடைக்கும்.
இவை மூன்றையும் அடிக்கடி செய்து வந்தால் உங்கள் கணிணியின் வேகத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment