Tuesday, December 9, 2014

சலாம் கூறுவதின் சிறப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
சலாம் கூறுவதின் சிறப்பு

சலாம் கூறுவதின் சிறப்பும்,அதன் பரப்புவதன் அவசியமும்,
இறை விசுவாசிகளே! உங்களின் வீடுகள் அல்லாத{மற்றவர்}வீடுகளில், நீங்கள் உள்ளே நுழைய அனுமதி பெற்று,அவர்களுக்கு நீங்கள் சலாம் கூறும்வரை உள்ளே நுழையாதீர்கள்.{24:27}                                                                                                                                                                                         நீங்கள் வீடுகளில் நுழைந்தால்,அல்லாஹ்விடமிருந்துள்ள வாழ்த்தாகவும், தூய்மையான அபிவிருத்தியாகவும் உள்ள சலாமை உங்களிடையே கூறிக்கொள்ளுங்கள் [24:61]
ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம்"இஸ்லாத்தில் சிறந்தது எது?"என்று கேட்டார்.பசித்தவனுக்கு நீர் உணவளிப்பது,நீர் அறிந்தவர்,அறியாதவர் என அனைவருக்கும்சலாம் கூறுவது"என்று நபி [ஸல்] பதில் கூறினார்கள்.{புகாரி:12.முஸ்லிம்:39}
அல்லாஹ் ஆதம்[அலை]அவர்களைப் படைத்த போது[அவரிடம்]"நீர் சென்று அங்கே உட்காந்திருக்கின்ற வானவர்களுக்கு சலாம் கூறுவீராக! உமக்கு அவர்கள் கூறும் வாழ்த்துக்களை நீர் கேட்பீர்ராக! நிச்சயமாக அது உமக்குரிய வாழ்த்துகளாகும். உம வாரிசுகளுக்குரியே வாழ்த்துக்களாகும்."
அஸ்ஸலாமு அழைக்கும் {உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக}
என ஆதம்{அலை}வானவர்களிடம் கூறினார்.உடனே அவர்கள் அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி [உங்கள் மீதும் அல்லாவின் சாந்தியும்,அவனின் கருணையும் உண்டாவதாக}  என்று கூறினார்கள்.[புகாரி:3326.முஸ்லிம் :2841]
மனிதர்களே!சலாம் கூறுவதை பரப்புங்கள்.பசித்தவனுக்கு உணவளிங்கள்.
உறவினர்களை ஆதரிங்கள்.மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள்
தொழுங்கள்.சலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொன்னால் பத்து நன்மைகள், அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்றால் இருபது நன்மைகள்.அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகா
த்துஹூ என்று சொன்னால் என்று கூறினால் 30 நன்மைகள்.
முஹ்மீனுக்கு முஹ்மீன் வலைப்பூவில் உங்கள் கருத்தை பகிரும் போது முதலில் சலாத்தை கூறுங்கள்.நாம் சலாத்தை கூறி அதன் பயனை பெறுவோமாக!
Good morning , Good afternoon , Good evening , Good night இவை தான் நாம் அனைவரும் தினந்தோறும் பயன்படுத்தும் வார்த்தைகளாகும். இதனால் என்ன பயன்??
இதற்கு பதிலாக ஒருவரை சந்திக்கும் போதெல்லாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு என்று கூறுங்கள். உங்கள் சகோதரரும் அதற்கு பதில் அளிப்பார். அப்போது நீங்கள் ஒருவருக்கொருவர் துஆ செய்து விட்டீர்கள். மிகவும் எளிதாக நன்மையையும் பெற்று விட்டீர்கள்.
இஸ்லாம் ஓர் எளிமையான மார்க்கமாகும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு சகோதர , சகோதரிகளே
Bye Bye என்பதன் அர்த்தம் தெரியுமா?
★★★★★★★★★★★★★★★★★
நாங்கள் முஸ்லிம்கள் எனினும் நாம் அறிந்தும் அறியாமலும் ஐரோப்பியர்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்.
"ஒரு மனிதன் ஒரேயொரு வார்த்தையைப் பிரயோகிப்பான் அது ஒரு பொருட்டாகவும் கருதப்படமாட்டாது எனினும் அதன் மூலம் 70 கூட்டத்தினர்கள் நரகில் இருப்பார்கள்" என்பது ஒரு ஹதீஸின் கருத்தாகும்.
Bye Bye என்பதன் கருத்து:
நீங்கள் "Baba" என்ற கடவுளின் பாதுகாப்பில் ஆகிவிட்டீர்கள்" என்பதாம்.
இந்த வார்த்தை நபியவர்கள் எமக்குக் கற்றுத்தந்த "في أمانالله" அல்லாஹ்வின் பாதுகாப்பில் ஆகிவிட்டீர்கள் என்ற வாசகத்திற்கு மாற்றமாகும்.
எனவே அல்லாஹ்விற்காக இத்தகவலை உலகிற்கு பகிரந்து எம்மையும் அனைத்து முஸ்லிம்களையும் இந்தத் சொல் சார்ந்த "ஷிர்க்"கிலிருந்து பாதுகாத்துக் கொளவோமாக!
அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்.

No comments:

Post a Comment