அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.....
"நாம் வாழ்க்கையின் ஆயுள்காலம் அறுபது, அல்லது எண்பதாக இருந்தாலும் அதில் எத்தனை ஆண்டுகாலம் முஸ்லிம்களாக வாழந்திருக்கிறோம். எட்டு வயதிற்குப்பின் சுய அறிவு கிடைத்தற்குப் பின்னால்....அல்லது இருபது வயதிற்குப் பின்னால்.... அல்லது
நாற்பது வயதிற்குப் பின்னால்... அல்லது அறுபது வயது வயோதிகத்தின் பிடியில்
அகப்பட்டும் கூட.... சுய சிந்தனையாக....
நபி (ஸல்) அவர்கள்:
மனித குலத்திற்கே ஒரு முன்மாதிரியான ஒரு ஒழுக்கமான லட்சிய சமூகத்தை
உருவாக்கியதும், நீதிமிக்க ஒரு அரசாட்சியை உருவாக்கியதும். சிலை வணக்கத்தை அடித்து ஒழித்ததும். ஒரிறைக் கொள்கையை நிலை நாட்டியதும் இவை யனைத்தும்அல்லாஹ்வின் அருளைப் பெற்ற வெறும் 23 ஆண்டு காலகட்டத்தில் தான்...
#அபூபக்கர் (ரலி) அவர்கள்
இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செலுத்தினார். பொய் நபிமார்களை இல்லாமல் ஆக்கினார். இஸ்லாத்தின் அடிப்படையையே இல்லாமல் ஆக்க நினைத்தவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கியதும். ரோம, பாரசீகம் என்று அன்றைய வல்லரசுகளையே திகிலுறச் செய்ததும். ஜகாத் தரமுடியாது, என்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும். ஏழைகளின் உரிமைகளுக்காகப் போராடிய முதல் ஆட்சியாளர் என்ற பெயரை பெற்றும், இவை அனைத்தும் வெறும் 30 மாதங்களில் தான்.....
#உமர் (ரலி) அவர்கள்
உமரின் ஆட்சி வேண்டும் என்று அவரை விரும்பாதவர்கள்கூட கூறும் அளவிற்கு பெயர் பெற்றதும். பாரசீகமும் ரோமும் வீழ்ந்ததும், தவறு செய்ய நினைப்பவர்கள் உமரின் பெயரைக் கேட்டாலே நடுங்கும் அளவிற்கு நீதியுடன் ஆட்சி செலுத்தி தானும் தூங்காமல் தன்னுடன் இருப்பவர்களையும் தூங்கவிடாமல் இவர் செய்த நேர்மையான
ஆட்சியால் உலகமே இன்றளவும் வியக்க வைத்தது. இவை அனைத்தும் வெறும் 10 ஆண்டுகளில்தான்......
#ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்
30 வயது வரை முஷ்ரிக்காக வாழ்ந்தார். அதன் பின் இஸ்லாத்தை ஏற்று 37வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால் அவரின் மரணத்தின் போது ஜிப்ரயீல்( அலை) நபி (ஸல்) அவர்களிடம் வருகிறார். நபி (ஸல்) அவர்கள் வஹிதானே கொண்டு வருவார் என்ன விஷயம் ? என்று கேட்க ஷஅத் (ரலி) அவர்கள் மரணித்து விட்டார். இறைவனின் அர்ஷே நடுங்குகிறது என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், அன்ழலா (ரலி) அவர்களை மலக்குமார்கள் குளிப்பாட்டியதைப் போல ஸஅத் (ரலி) அவர்களையும் மலக்குமார்கள் குளிப்பாட்டுவதற்குள் நாம் சென்றுவிட வேண்டும் என்று தோழர்களிடம் கூறி ஜனாஸா தொழுகை நடத்த பள்ளியில் நுழைகிறார். சில பேர் பள்ளியில் அங்கும் இங்குமாக அமர்ந்து இருக்க, நபி (ஸல்) அவர்கள் குதிகால்களை மேலே தூக்கியவா்களாக பள்ளியில்
நுழைகிறார். உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு நடக்கின்றீர்கள் ? என்று கேட்க.....
நபி (ஸல் ) அவர்கள்:
என்ன சொல்கிறீர்கள்? ஸஅத்னுடைய ஜனாஸாவில் கலந்து கொள்ள 70 ஆயிரம்
மலக்குமார்களை அல்லாஹ் அனுப்பியிருக்கிறான். அல்லாஹ் இது வரை இத்தனை மலக்குமார்களை அனுப்பியதே இல்லை என்றார்.!
அவர் இஸ்லாமிய வாழக்கை வாழ்ந்தது வெறும் 7 ஆண்டு காலம்... அவர் மரணத்திற்கு அல்லாஹ்வின் அர்ஷே நடுங்கியது என்றால்.....எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்.. நாம் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம்.. நமக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது.. மரணத்திற்கு முன்பே வாழ்க்கையின் செயல்பாடுகளை பரிசோதிக்கின்ற கட்டாயத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும்...! நம்மை நாமே சுயப் பரிசோதனை செய்ய வேண்டும்! நமது செயல்களை ஆராய வேண்டும்!
இறைவன்! நம் அனைவரையும் முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்கக் கூடிய
பாக்கியத்தைத் தருவானாக!!
#ஆமீன் #ஆமீன் யா ரப்பில் ஆலமீன்!!

No comments:
Post a Comment