Tuesday, December 30, 2014

காமராஜரின் போராட்டங்களும் அனுபவித்த தண்டனைகளும்

விருதுநகர் மாவட்டத்தில், 1903ம் ஆண்டு பிறந்த காமராஜர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்பிலேயே நிறுத்திக்கொண்டார். துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர், முதல் உலகப் போரின்போது, பெரும் தலைவர்களின் பேச்சைக் கேட்டு முதன் முதலாக அரசியலில் ஈடுபட்டார்.
ஏராளமான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட காமராஜர், அதற்காக பல முறை சிறை தண்டனைகளையும் அனுபவித்துள்ளார்.
அவர் மேற்கொண்ட போராட்டங்களும், சிறை தண்டனைகளும்:
1920ல் ஒத்துழையாமை இயக்க போராட்டம்
1923ல் மதுரையில் கள்ளுக்கடை போராட்டம்
1930ல் உப்பு சத்தியாகிரகம் (இரண்டாண்டு சிறை)
1932ல் சட்ட மறுப்பு இயக்கம் (ஓராண்டு சிறை)
1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (ஓராண்டு சிறை)
இவை மட்டுமின்றி, சுசீந்திரம் போராட்டம், வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட ஏராளமான மக்கள் போராட்டங்களிலும் காமராஜர் முக்கிய பங்கு வகித்தார்.

No comments:

Post a Comment