காந்திஜியின் வாரிசு எனப் போற்றப்பட்டவர் பெருந்தலைவர் காமராஜர். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் பிறந்த நாளிலேயே காமராஜர் காலமானார்.
இந்த இருவரும் கலந்து கொண்ட வியப்பான நிகழ்ச்சி 1934-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி விருதுநகருக்கு மகாத்மா காந்தி விஜயம் செய்தார். கடும் மழையும், புயலும் அடித்தன. அதை பொருட்படுத்தாத மக்கள் மகாத்மாவை காண ஆவலுடன் கூடியிருந்தனர். மக்கள் அளித்த பணத்தை காமராஜர் காந்திஜியிடம் அளித்தார்.
காந்தியைப் பார்க்க முடியாமல் மக்கள் தவித்தனர். வளையச்செட்டி என்ற பெயரில் அங்கிருந்த மண்டபத்தில் காந்தி ஏறி நின்றால் அவரை அனைவரும் காண முடியும். ஆனால் காந்தியால் அந்த மண்டபத்தில் ஏற முடியவில்லை.
அப்போது காந்தியைக் காமராஜர், `அலேக்'காக தூக்கி மண்டபத்தின் மேலே மிகவும் பத்திரமாக ஏற்றி விட்டார். மக்கள் அனைவரும் காந்தியை மகிழ்ச்சியோடு பார்த்தனர். அந்த நேரத்தில் காமராஜரின் சமயோசித புத்தியை அனைவரும் பாராட்டினர்.
No comments:
Post a Comment