அல்லாஹ் தஆலா மறுமை நாளில் (சில மனிதர்களைப் பார்த்து), "ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய் விசாரிக்க வரவில்லை'' என்பான். அதற்கு அம்மனிதன், "என் இறைவா! எப்படி நான் உன்னை நோய் விசாரிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான்.
இதற்கு அல்லாஹ், "இந்த என்னுடைய அடியான் நோயுற்றிருந்தான்; அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறிய மாட்டாயா? நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று பதிலளிப்பான்.
மேலும், "ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்க வில்லை'' என்பான். அதற்கு அவன், "என் இறைவா! நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் உணவை வேண்டினான்; ஆனால் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியமாட்டாயா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்பான்.
"ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் வேண்டினேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை'' என்று இறைவன் கூறுவான். அதற்கு அவன், "என் இறைவனே! உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று அல்லாஹ் பதிலளிப்பான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4661
No comments:
Post a Comment