Thursday, January 1, 2015

இயற்கை முறை உணவகம்

ஆரோக்கியமான இயற்கை முறை உணவகம் தொழில் பற்றிய விவரங்களை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் நல்ல வருமானம் மற்றும் வரவேற்பை கொண்ட துறைகளில் உணவகம் முக்கிய இடம் வகிக்கிறது. அதேசமயம் போட்டிகள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சவால்கள் உள்ளது. ஆரோக்கியமான இயற்கை முறை பாரம்பரிய உணவகங்களை மிகுந்த கவனம், உழைப்பு மற்றும் நேர்த்தியுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

மேற்கத்திய மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை தவிர்த்து, நம் முன்னோர்களிம் கூற்றுபடி “ உணவே மருந்து, மருந்தே உணவு “ என்ற முறையை பின்பற்றினால் இன்றைய பல்வேறு நோய்களை தவிர்க்கலாம். இரசாயனமற்ற இயற்கை முறையில் விளைவிக்கபட்ட சிறுதானியங்கள், கம்பு,கேழ்வரகு,சோளம்,பருப்பு வகைகள்,கீரைகள்,காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற சரிவிகித சத்துள்ள உணவு பண்டங்களை தயாரிப்பது மிகச் சிறப்பானது. இவ்வகை உணவுகளில் புரதச்சத்து, நார்சத்து, இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே உள்ளன.
சிலவகை சாத்தியனமான உணவு பட்டியல்களை தொகுத்துள்ளேன்..
சிற்றுண்டி வகைகள்:
- சிறுதானிய உருண்டை - பட்டாணி சுண்டல் - வாழைத்தண்டு சூப் - கொள்ளு இனிப்பு உருண்டை - வேர்கடலை சுண்டல் - கீரை சூப்
- வெந்தய களி - சிறுதானிய சுண்டல் - காளான் சூப் - பனியாரம்
- கொண்டைகடலை சுண்டல் - காய்கறிகள் சூப்
- புட்டு - பலவகை பருப்பு சுண்டல் - பனீர் சூப் - கொழுக்கட்டை - -
- மொச்சை சுண்டல் - நெய் அப்பம்
- கேழ்வரகு/கம்பு கூழ் - வாழைப்பூ வடை - கீரை வடை - தேங்காய்-அரிசி பாயசம் - தேங்காய்- வெல்ல பால் - பல்வகை பழ சாலட்
- அவல் உப்புமா - தேங்காய் பர்பி - அன்னாசிபழ கேசரி - பயறு இனிப்பு கஞ்சி - அதிரசம் - மரவள்ளிக்கிழங்கு அல்வா
- அரிசி-உளுந்து கஞ்சி - பல்வகை பழச்சாறு - கேரட்/பீட்ரூட் அல்வா
தோசை/அடை வகைகள்:
- சிறுதானிய அடை - காளான் தோசை
- கம்பு தோசை - பட்டாணி தோசை
- கேழ்வரகு தோசை - கருவேப்பிலை/மல்லி தோசை
- வெந்தய தோசை - காய்கறி தோசை
- கோதுமை தோசை - இனிப்பு தோசை
- பல்வகை பருப்பு அடை - வாழைப்பூ அடை
- சோள தோசை - கருப்பட்டி தோசை
- சோயா பீன்ஸ் தோசை - கீரை அடை
சாத வகைகள்:
- காய்கறி சாதம் - எலுமிச்சை சாதம்
- கீரை சாதம் - மிளகு சாதம்
- தேங்காய் சாதம் - புதினா சாதம்
- பிரண்டை சாதம் - கருவேப்பிள்ளை சாதம்
- தூதுவளை சாதம் - கொத்தமல்லி சாதம்
- தக்காளி சாதம் - பல்வகை பருப்பு சாதம்
சிறப்பு உணவுகள்:
- காளான் பொரியல் - காய்கறி பிரியாணி
- காளான் பஜ்ஜி - நவதானிய பிரியாணி
- காளான் கிரேவி - புதினா பிரியாணி
- காலிஃபிளவர் கிரேவி - காளான் பிரியாணி
-- காலிஃபிளவர் பகோடா - பட்டாணி/கொண்டைகடலை
பிரியாணி
மேற்கண்ட சைவ உணவுகளுடன் பிறவகை சிறப்பு உணவுகளையும் சிறந்த முறையில் அளித்தால் இயற்கை உணவக தொழிலில் வெற்றி சாத்தியமே!

No comments:

Post a Comment