Friday, January 9, 2015

ஹதீஸ்- சில உறவினர்கள்

ஒரு மனிதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்:
அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். அவர்கள் என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் மோசமாக நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுடன் பொறுமை யோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கிறார்கள்.''அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால், அது அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்றதாகும். அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான், நீர் இதே பண்பில் நிலைத்திருக்கும் வரை.'' (முஸ்லிம்)

No comments:

Post a Comment