ஷூக்கள் தண்ணீர் பட்டு ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா. அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும்.
சட்டைக் காலர்களிலும், கை மடிப்பு களிலும் உள்ள அழுக்குகள் எப்படித் துவைத்தாலும் போக மறுக்கிறதா? முதல் நாள் இரவே அவற்றின்மேல் கொஞ்சம் முகத்திற்கு போடும் பவுடரைத் தடவி வைத்துவிட்டு, மறுநாள் காலை வழக்கம்போலத் துவைத்து விடுங்கள். அழுக்கு இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
சட்டைகளிலோ, பெட்ஷீட்டுகளிலோ ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சூயிங்கத்தின் மேல் ஐஸ் கட்டியால் தேய்த்தால் சுலபமாக வந்து விடும்.
உங்கள் வீட்டு ஃப்ரிசரினுள் அடிக்கடி நிறைய ஐஸ் கட்டிகள் சேர்ந்து விடுகின்றனவா? அதனுள்ளே கொஞ்சம் உப்பைத் தூவி வைத்து விடுங்கள். ஐஸ் உறையாது.
கதவிடுக்குகள் கிறீச் ஒலி எழுப்பி இம்சிக்கின்றனவா? அந்த இடங்களில் பென்சிலால் தேய்த்து விடுங்கள். பென்சி லில் உள்ள கிராஃபைட் சத்தத்தைக் குறைக்க உதவும்.
விலை குறைந்த கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது.
எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்காமலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து விடுங்கள்.
பழைய சாக்ஸுகளைத் துடைப்பத்தின் கைப்பிடிப் பக்கம் மாட்டிக் கட்டி விட்டால் துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.
உளுந்து நிறைய வாங்கி விட்டீர்களா? அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெயைத் தடவி வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். பூச்சிகள் வராது
No comments:
Post a Comment