சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா மரணம் அடைந்ததையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை
சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மரணம் அடைந்தையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் சனிக்கிழமையன்று (ஜனவரி 24) இந்தியா முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். எந்த அரசு அலுவலகங்களிலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி எதுவும் இருக்காது. அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், யூனியன் பிரேதச நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு செயலர்களிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் காலமான சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்துல்லாவின் மறைவைத் தொடர்ந்து அவரது சகோதரர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.
No comments:
Post a Comment