அன்னை உம்மு ஸலாமாவின் தியாகத் துடிப்பைப் பாருங்கள்! தம் கணவருடன் ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற வேளை, தம்மைத்தடுத்து தமது பிஞ்சுக் குழந்தையையும் குரைஷpகளும்,உறவினர்களும் பறித்து வைத்துக்கொண்ட நிகழ்ச்சி உள்ளத்தை உருகச்செய்கிறது.
தமது கணவருடன் பெருமானாரின் பாசறைக்குப் போக முடியவில்லையே! தம்மை அழைத்துச் செல்ல யாரேனும் முன் வரமாட்டார்களா? என ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து வந்து ”தன்யீம்” என்ற இடத்iதிலே காலை முதல் மாலை வரை காத்துக் காத்துக் கிடப்பார்கள் அன்னையவர்கள்..
எத்தனை நாட்கள் தெரியுமா? ஒரு நாளல்ல! ஒரு வாரமல்ல! ஒருமாதமல்ல! ஒரு ஆண்டு முழுவதும் இப்படியே வந்து போவார்கள். இறுதியாக அவர்மீது இரக்கப்பட்ட சில உறவினர்கள் பரிதாபப்பட்டு அவர்களின் பிஞ்சுக் குழந்தையையும் வாங்கிக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இது போன்ற வரலாறைக் கண்டிருக்கிறோமா?
.
உஃத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி உம்மு குல்தூம் பின்த் உக்பா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தனித்தனியாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு கால் நடையாக ஹிஜ்ரத் சென்றார்கள். அதைப்போல் உம்மு ஹக்கீம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் தன்னந்தனியாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற தீரமிக்க வீர வரலாற்றுகளை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இது மட்டுமா? இன்னும் இருக்கிறது

No comments:
Post a Comment