Wednesday, January 28, 2015

முன்பருவ கல்வியின் முறைமை

கல்வியில் உலத்தின் முன்னோடியாய் விளங்கும் ஃபின்லாந்தின் முன்பருவ கல்வியின் முறைமை அறியலாம் என்று பார்த்தால், நம் பாரதி சொன்ன வார்த்தைகள் அங்கு முறையாய் பின்பற்றப்படுகிறது.
ஆமாங்க...”ஓடி விளையாடு பாப்பா...... ” பாடலில் சொல்லப்பட்ட வரிகள் தான் பாடத்திட்டம்.
இங்கு நாம் அதை ஒழித்துக்கட்டிவிட்டு இயந்திரமாய் மாற்றும் கல்வித்திட்டத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து, இராப்பகலாய் அல்லலுற்று இயந்திரங்களை உருவாக்குகிறோம்.
தாய்மொழியில் சிந்தித்து, கற்று, உலகிற்கு தனது பெரும் பங்களிப்பினைத் தரும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆங்கிலம் கற்றால்தான் தம் வாழ்வு நிறைவுறும் என்று எண்ணியதில்லை. மாறாக ஆங்கிலயர்களெல்லாம் இவர்களுடன் வணிகம் புரிவதற்கென இவர்களின் மொழியினைக் கற்கின்றனர்.
இங்கு ஆங்கிலம் பேசுவதற்காகவே, ஆயிரக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது, அடிமைச் சேவகம் புரிவதற்காகவே.
ஃபின்லாந்து (முன்பருவ) கல்வி முறைமை.
----------------------------------------------------------------
1) விளையாட்டு
2) (தாய்)மொழி, மொழிவழி ஊடாடல்
3) எண் கணிதம்
4) நன்னெறி மற்றும் சிந்திக்கும் முறை.
5) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வரலாறு (கதை வழி)
6) உடல்நலம்
7) உடலியற் சார்ந்த மோட்டார் இயக்க மேம்பாடு.
8) கலை மற்றும் கலாச்சாரம்
(சத்தியமா சினிமா இல்லைங்க......)
நாம் எங்கு இருக்கிறோம், எதை திணிக்கிறோம் ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கே புரியும்.

No comments:

Post a Comment