.என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன்.
உடனே அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில் தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு (தஷஹ்ஹூதில்) கற்றுக் கொடுத்திருக்கின்றான். என்று கேட்டோம். அதற்கு அவர்கள் இறைவா! இப்ராஹீம் அவர்கள் மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்கள் மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment