Saturday, January 17, 2015

தொழக்கூடாத நேரங்கள் மற்றும் தொழுவது மக்ரூஹ் ஆன நேரங்கள்

தொழக்கூடாத நேரங்கள்
மூன்று நேரங்களில் அந்த நேரங்கள் வருவதற்கு முன் கடமையான தொழுகைகளை தொழுவது அறவே கூடாது.
1. சூரியன் உதயமானதிலிருந்து சுமார் 16 நிமிடங்கள் வரை.
2. சூரியன் உச்சிக்கு வந்ததிலிருந்து உச்சியிலிருந்து சாயும் வரை.
3. சூரியனிம் நிறம் மஞ்சனித்ததிலிருந்து மறையும் வரை.
இந்த நேரங்கள் வந்த பின் கடமையான தொழுகையாக இருந்தால் மக்ரூஹ் உடன் நிறைவேறும். இந்த மூன்று நேரங்களிலும் நபில் தொழுவது மக்ரூஹ் தஹ்ரீமாகும்.


தொழுவது மக்ரூஹ் ஆன நேரங்கள்
பஜ்ருடைய நேரம் வந்தபின் பஜ்ரு சுன்னத்தைவிட அதிகமாக நபில் தொழுவது, குத்பா ஓத இமாம் வந்ததிலிருந்து தொழுது முடிக்கும் வரையுள்ள நேரத்தில் நபில் தொழுவது, ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லும் போது நபில் தொழுவது (பஜ்ருடைய சுன்னத் மட்டும் தொழலாம்) பெருநாள் தொழுகைக்கு முன்னும், பின்னும் நபில் தொழுவது, ஹஜ்ஜின் போது அரபா முஜ்த்லிபாவில் ஜம்உ செய்வதற்கிடையில் நபில் தொழுவது. பர்ளான தொழுகையின் நேரம் நெருக்கடியாக இருக்கும் போதும், மல ஜலத்தை அடக்கிக்கொண்டும், கவனத்தை ஈர்க்கும்படியான உணவு மற்றவைகள் இருக்கும்போது தொழுவது ஆகியவை மக்ரூஹ் ஆகும். 

No comments:

Post a Comment