மறதியாகவோ, கவனக்குறைவாகவோ, வேண்டுமென்றோ, தொழுகைக்கு சம்பந்தமில்லாதவற்றை பேசுவது, பிறருக்கு ஸலாம் சொல்வது, பிறரின் ஸலாமுக்கு நாவாலோ, முஸாபஹாவின் மூலமோ பதிலளிப்பது, தொடர்ந்து மூன்று முறை உறுப்புகளை அசைப்பது நெஞ்சை கிப்லா திசையில் இருந்து வேறு பக்கம் திருப்புவது, ஏதாவது சாப்பிடுவது, குடிப்பது, பல்லுக்கிடையில் உள்ளவற்றிலிருந்து ஒரு கடலை அளவு விழுங்கி விடுவது, அவசியமின்றி கனைப்பது (அவசியம் என்பது ஓதுவதற்கு இடையூறு ஏற்படுவதாகும்.) வாயால் ”பூ” என்று சொல்வது.
உடலில் உள்ள வேதனையால் அழுவது, முணங்குவது, தும்மியவருக்கு யர்ஹமுகுமுல்லாஹ் சொல்வது, சந்தோசமான, துக்கமான ஆச்சரியமான விஷயங்களை காதால் கேட்டு அதற்குரிய த்க்ருகளை ஓதுவது, தயம்மும் செய்து தொழுதவர்களுக்கு தயம்முமை ஆகுமாக்கும் காரணம் நீங்கி விடுவது, ஆடையில்லமல் தொழுதவர் ஆடையையும், ருகூவு, சுஜூது செய்யமுடியாமல் தொழுதவர் அதற்கு சக்தியையும் பெறுவது.
பஜர் தொழும்போது சூரியன் உதித்து விடுவது. பெருநாள் தொழுகையில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து விடுவது. ஜும்ஆ தொழுகையில் அஸர் வக்து வந்து விடுவது. காயத்திற்கு கட்டு போட்டு மஸஹு செய்தவரின் காயம் சுகமாகி அதனால் கட்டு விழுந்து விடுவது. தங்கடவாளிகளின் தங்கடம் நீங்கி விடுவது, தான் வேணுமென்றோ, வேறொருவரின் செயலாலோ உளூ முறிந்து விடுவது, மயக்கம், பைத்தியம் போன்றவை ஏற்படுவது ஆகிய காரஅங்கள் அத்த ஹிய்யாத்து ஓதும் அளவுக்கு கடைசி இருப்பில் உட்கார்வதற்கு முன்பாக ஏற்பட்டால் தொழுகை முறிந்து விடும்.
தக்பீர் சொல்லும்போது ஆல்லாஹு அக்பர் என்றோ, அல்லஹு ஆக்பர் என்றோ சொல்வது, மனப்பாடமில்லதவற்றை குர்ஆனைப் பார்த்து ஓதுவது, மறைக்க வேண்டிய இடங்கள் திறந்திருக்கும் நிலையிலோ, நஜீஸ் பட்டிருந்த நிலையிலோ தொழுகையின் ஒரு பர்ளை நிறைவேற்றுதல், இமாமுக்கு முன்பாக அதிலிருந்து வேறு பர்ளுக்கு சென்று விடுவது, இரண்டு ரக அத்துள்ள தொழுகையில்லாத மற்ற தொழுகைகளில் இரண்டாவது ரகஅத்தில் அத்தஹிய்யாத்துக்குப்பின் அந்த தொழுகை இரண்டு ரகஅத்துள்ள தொழுகையாக எண்ணி சலாம் கொடுத்து விடுவது ஆகிய காரணங்களால் தொழுகை முறிந்துவிடும்.
No comments:
Post a Comment