கணினியை shut down செய்யும்போது சில நேரங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதே நேரத்தில் பல்வேறான செயல்கள் Background processes இல் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து, பின்னர் தான் கணினி shut down ஆகும் .
இதனை உடனடியாக நிறுத்துவதற்கு
Start ---Run இல் சென்று regedit என type செய்யுங்கள் .
பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில், HKEY_CURRENT USER\Control Panel\Desktop என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இரண்டு முறை சொடுக்கு செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.இபொழுது OK கொடுத்து வெளியேறுங்கள்.
இப்போது முன்பை விட வேகமாக கணினி shutdown ஆவதை காணலாம்.
No comments:
Post a Comment