* செவாலியர் விருதை உருவாக்கியவர் நெப்போலியன் போனபார்ட்.
* காதல் காட்சியே இல்லாமல் நாடகங்கள் எழுதியவர் பெர்னாட்ஷா.
* மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்கள் கண்களைத் தானம் செய்ய முடியாது.
* வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் தவிர பால், தயிர், மாவு, வெண்ணெய் தயாரிக்கலாம்
* உலகிலேயே முதன் முதலில் வெளிவந்த மாலை நாளிதழ் “தி ஸ்டார்’, இடம்: லண்டன்.
* பௌத்தர்களின் ஆண்டுக் கணக்கு கி.மு.543 வைசாக பௌர்ணமியிலிருந்து துவங்குகிறது.
* என்றுமே கெட்டுப் போகாத உணவு தேன்.
* முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
* பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை
* பூனைகள் இனிப்பைத் தொடாது.
* பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.
* ஆமைக்குப் பற்கள் கிடையாது
* முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில் 30 பற்களும் உண்டு
* பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.
* பச்சையம் இல்லாத தாவரம் காளான்
* நீரில் நீந்திக்கொண்டே உறங்கும் உயிரினம் – வாத்து
* 50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் – மூங்கில்
* யானையைப்போன்ற தந்தம் உள்ள உயினம் – வாலரஸ்
* நின்று கொண்டே உறங்கும் விலங்கு – குதிரை
* சிலந்தி வகைகிளில் அதிக விஷமுள்ளது – தி பிளாக் விடோ
No comments:
Post a Comment