சென்னை ஏர்போட்டில் சமீபகாலமாக இஸ்லாமியர்கள் தன்னிச்சையான முறையில் தங்களது தொழுகையினை நிறைவேற்றி வந்தனர். மேலும் ஏர்போட் நிர்வாகத்திடமும் தொழுகை நடத்த தனியாக இடம் ஒதுக்கி தரவும் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றையதினம் முதல் சென்னை ஏர்போட் நிர்வாகம் சார்பில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த ஆண் பெண்கள் இருபாலருக்கும் தனிதனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஏர்போட்டில் பணியாற்றிவரும் எம்.எம்.எஸ் ஜாஃபர் அவர்கள் கூறுகையில் " இது நாள் வரையில் இஸ்லாமியர்கள் சென்னை ஏர்போட்டில் தனியாக ஓரிடத்தில் தொழுகை நடத்திவந்தோம். மேலும் தொழுகை நடத்த தனியாக ஓரிடத்தை ஏற்படுத்தி தரவும் ஏர்போட் நிர்வாகத்தை வழியுறுத்தினோம். இந்த நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று நேற்றுமுதல் சென்னை ஏர்போட் நிர்வாகம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தனியாக கேட் 14 அருகே mother with infant அறைக்கு அடுத்து ஆண் பெண்களுக்கு இடம் ஒதுக்கி தந்துள்ளனர். இதனை நமது சகோதர சகோதரிகள் முறையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்" என்றார்
மேலும் நேற்று முதல்முறையாக மகரிப் தொழுகை ஜமாத்துடன் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment