Monday, July 13, 2015

ரமளானில் வணக்கங்கள்

ரமளான் மாதத்தில் செய்யவேண்டிய 8 வணக்கங்கள்-அமல்கள்
(நன்மைகளை அதிகம் பெற்றுத் தரத் கூடிய செயல்கள்) குறித்து ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை வரிசையாகப் பார்ப்போம்.
1. தூய்மையான நோன்பு
‘இறை நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பர்த்து ரமளானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ( புகாரி, முஸ்லிம்) வெறுமனே உண்ணாமல் பருகாமல் இருப்பதன் மூலம் மடடும் இந்த நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விடமுடியாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
‘பொய் பேசுவதையும், போலியான செயல்களையும் ஒரு நோன்பாளி விடவில்லையெனில் அவன் பசித்திருப்பதாலும், தாகித்திருப் பமாலும் இறைவனுக்கு எந்த தேவையுமில்லை. (புகாரி)
மேலும் இரத்தினச்சுருக்கமாகக் கூறினார்கள் :-
‘நோன்பு ஒரு கேடயம்‘ என்று. (புகாரி, முஸ்லிம்)
1. நோன்பு தன்னடக்கத்தை மனிதனுக்கு பயிற்றுவிக்கிறது.
2. ஆணவத்தையும் அகந்;தையைம் அழிக்கிறது.
3. செல்வச் செருக்கை போக்குகிறது
4. இச்சைகளுக்காளாமல் காப்பாற்றுகிறது.
5. வீண்பேச்சுகளிலும் சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடுவதைத்தடுக்கிறது.
6. அருவருப்பான காட்சிகளைக் காண்பதிலிருந்து கண்களை காக்கிறது.
7. பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் ஆகியவற்றை விட்டும் நாவைத் தடுக்கிறது.
8. ஆகாத பேச்சுகளையும், பாட்டுகளையும் கேட்பதிலிருந்து காதுகளை தடுக்கிறது.
9. தீயவை செய்வதைவிட்டும் கைகளைத் தடுக்கிறது.
10. தீமைபயக்கும் இடங்கள், விபச்சார விடுதிகள், மதுபானக் கடைகள், திரையரங்குகள் செல்தைவிட்டும் கால்களைத் தடுக்கிறது.
இவ்வாறு அனைத்து உறுப்புகளையும் தீமை செய்வதைவிட்டும் தடுக்கிறது.
சுருங்கச்சொல்லின் நரகத்தின் நெருப்பிலிருந்து மனிதனைக் காக்குகிறது. குறிக்கோளில்லாதோருக்கு நோன்பு பசியும் பட்டினியுமேயன்றி வேறில்லை.
‘எத்னையோ பேர் நோன்பிருக்கின்றனர். அவர்கள் பசியையும், தாகத்தையும் தவிர எதையும் உணருவதில்லை. என்ற நபி பெருமானாரின் அரிய வாக்கு மிகவும சிந்தனைக் குரியதாகும்..
‘போலித்தனமாக வாழக்கை கூடாது’என்பதை இந்த நபி மொழி நமக்குப் போதிக்கிறது.
ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்குகள் வரை கூலி கொடுக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகிறான் நோன்பைத் தவிர.ஏனெனில் நோன்பு எனக்கே உரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன். (இப்னுமாஜா)
எல்லா வணக்கங்களுக்கும் இறைவன் தானே கூலி கொடுக்கிறான். இருப்பினும் இந்த நோன்iபுக்கு மட்டும் ‘நானே கூலி கொடுப்பேன்’என வித்தியாசப்படத்திக் கூறுவதேன்?
காரணம்,தொழுகை, நோன்பு,ஹஜ்ஜு போன்ற கடமைகள் நிறைவேற்றப்படும் போது புறத்தாருக்கப் புலப்படுகிறது. நோன்பு மட்டும் பிறரின் பார்வையிலிருந்து தடுகப்படுகிறது. ஒருவன் பிறர் கண்களில் படாமல் இரகசியமாக உணவை உட்கொண்டானா? நீரைப் பருகினானா? என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
ஆதலால் நோன்பை மட்டும் சிறப்பித்து அதற்கு ‘நானே கூலி கொடுப்பேன்’என இறைவன் பாகுபடத்தி கூறுவது இங்கு சிந்திக்கதாகும்.

2. இரவுத்தொழுகை (கியாமுல்லைல்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
இறை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமளானின் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.( புகாரி, முஸ்லிம்) இரவுத் தொழுகை ரமளானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமளானில் அதைவிட முக்கியத்தைப் பெறுகிறது.
‘ரமளானிலும், ரமளானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை.’ என அனனை ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ((புகாரி)

3. தருமம்.(ஸதகா)
நபி(ஸல்)அவர்கள் காற்றைவிட வேகமாக தர்மம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும் தர்மமே மேலான தர்மம் என்றும் கூறினார்கள். (திர்மிதி) தர்மத்தை பணமாகவோ,உணவாகவோ வழங்கலாம். நோன்பாளிக்கு இஃப்தார் வழங்குவது தர்மத்தில் மிகவும் உயர்வானதாகும். நோன்பாளிக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மையைப்போல சிறிதும் குறையாது உணவளிப்பவருக்கும் கிடைக்கும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
ஒருவருக்கு நோன்பு திறக்க உணவளித்தால் ஒரு நோன்புக்கு இரு நோன்புக்குரிய நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு மாத நோன்புக்கு இரு மாத நோன்னுக்குரிய நன்மைகள் பரிசாகக் கிடைககின்றன. இவ்வாறு ரமளானில் அதிகமான பேருக்கு உணவளிப்பதால் எண்ணிக்கைக்குத் தக்கவாறு நோன்புடைய பலன்கள் பெருகிக்கொண்டே போகும்.

4. குர்ஆன் ஓதுதல்
திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யவேண்டும். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது சிறப்பிற்குரியதாகும்.. ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனை ஒரு தடவை ஓதிக்காட்டுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த ஆண்டில் (மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத் துவதற்காகவும்) இரண்டு தடவைகள் ஓதிக் காட்டினார்கள். நல்லோர்களான நம்முன்னோர்கள் (ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்) ரமளான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

5. இஃதிகாஃப்
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (பள்ளிவாசலில் தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த ஆண்டில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

6. உம்ரா
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ரமளானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும். மற்றொரு அறிவிப்பில் ‘ரமளானில் ஹஜ்ஜை நிறைவேற்றியர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றவராவார். (புகாரி ,முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரு இரவை அடைய முயலுதல்
லைலத்துல்கத்ர் என்னும் மாண்பார் இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறப்பிற்குரியது. (97:3) அதாவது 83 வருடங்களும் 4 மாதங்களும் செய்யும் அமல்ளைவிட மிகவும் மாண்புடையதாகும்.
‘ரமளானின் கடைசிப்பத்து இரவுகளில் ஒற்றைப்படையாக உள்ள இரவில் லைலத்துல கத்ர் இரவைத் தேடுங்கள்’ (புகாரி முஸ்லிம்) நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் லைத்துல் கத்ருடைய இரவில் நின்று வணங்குபவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக் கப்படும். (புகாரி,முஸ்லிம்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள:- நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அதிகமாக வணக்கத்தில் ஈடுவடுவார்கள்.ஏனைய மாதங்களில் இந்த அளவு ஈடுபடுவதில்லை. (முஸ்லிம்)
மேலும் அறிவிக்கிறார்கள்:-
நபி(ஸல்) ரமளானின் கடைசிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் தமது கச்சையைக் கட்டிக்கொண்டு அவற்றின் இரவுகளில் விழித்திருந்து வணக்கம் புரிவார்கள். தமது குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள். (புகாரி முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் வெளியே வந்தேன். இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டதன் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நன்iயாக இருக்கக் கூடும் என்றார்கள்.
ஆகவே அதை இருபத்தி ஒன்றுஇஇருபத்தி மூன்றுஇ இருபத்தி ஐந்துஇ இருபத்தி ஏழுஇ இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அடைந்தால் அதில் என்ன ஓதவேண்டும் என்று கேட்டேன். அதற்கு பின்வரும் துஆவை ஓதுமாறு நபியவர்கள் கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதீ.

8. பாவமன்னிப்புக் கோருதல் ( அல்இஸ்திக்ஃபார்)
நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நராகரிக்கப்பட மாட்டாது. என நபி(ஸல்) கூறினார்கள். ( )
மூவரின் துஆக்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படும்.
1. நோன்பாளியின் துஆ. 2. அநீதம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை.3. பயணம் செயபவரின் வேண்டுதல். (பைஹகீ)
மேலும் ஸஹர் (நள்ளிரவு)நேரத்தில் பாவமன்னிப்புக் கோருதல் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ( பார்க்க குர்ஆன் 51:18)

குறிப்பு :
1. அனுமதிக்கப்பட்டவை
நோன்பாளிக்கு கீழ்கண்டவை குர்ஆன், சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
1. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமளான் இரவுகளில் உடலுறவு கொண்டபின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமளான் நோன்பை நோற்பார்கள். என ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி,முஸ்லிம்)
2. பல் துலக்குவதில் ரமளான், ரமளான் அல்லாத காலங்கள் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் நோன்பு நோற்கும் காலங்களில் பல துலக்குவதில தவறில்லை.
3. உளுவின் போது வாய்கொப்பளிப்பதிலும்,நாசிக்குத்தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே புகாதவாறு எச்சரிக்கையாக இருப்புத அவசியமாகும். (பார்க்க: அபூதாவூது)
4. இரத்த தானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண்காதுக்கு சொட்டு மருந்து விடுதல்,எச்சில் விழுங்குதல்,தொண்டைக்குள் சென்றுவிடாதவாறு உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல்,பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் போன்றவைகள் நோன்பை முறித்துவிடாது.
5. முடிந்தவரை ரமளான் காலங்களில் பேணுதலுடனிருப்பது ஏற்புடையதாகும்.

2. அனுமதிக்கப்படாதவை :-
உண்ணுதல்,பருகுதல், தாம்பத்திய உறவு கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயலகளாகும்.ஆகவே நோன்பாளிகள் பகல் வேளையில் இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேணடும். எனினும் நோன்பு நோற்பவர் மறந்து உண்பதாலோ, பருகுவதாலோ அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் புகாரி, முஸ்லிம்) இவற்றில் ஏதேனும் ஒன்றை வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து விடாது இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றோர் முறித்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது)

3. சலுகையளிக்கப்பட்டவர்கள்
நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள். பிரயாணிகள், தள்ளாத வயதினர் (முதியோர்) ஆகீயோரில் முதியோரைத்தவிர ஏனையோருக்கு நோன்பை பின்னர் நோற்பதற்கு அனுமதியுள்ளது.முதியோர் நோன்பை விட்டதற்கு பரிகாரமாக ஒவ்வொரு நோன்புக்கும் ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும்..
( பார்க்க:குர்ஆன் : 2:184,185. மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத்.நஸயீ)

4. தடைசெய்யப்பட்டவர்கள்.
மாதவிடாய்,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் தூய்மையான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ:-
ذَهَبَ الظَّمَأُ وَ ابْتَلَّتِ الْعُرُوقُ، وَ ثَبَتَ الأجْرُ إنْ شَاءَ اللَّهُ
தஹபள்ளமஊ வப்தல்லதில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.
பொருள்: தாகம் தணிந்ததுஇ நரம்புகள் நனைந்தனஇ அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது. ஆதாரம்: அபூதாவூத்

1) நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் பிராத்தனை தட்டப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன் இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நோன்பாளி நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளை செய்து வரவேண்டும்.
இன்று முஸ்லிம்களில் பலர் நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். விதவிதமான உணவுப்பொருட்களை தயாரிப்பதிலும். முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். உணவின் கவனத்தில் துஆ செய்வதையும் மறந்து விடுகிறார்கள்.
நோன்பின் இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும்இ எல்லா மஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும்.. நமது சகல தேவைகளையும் நிறைவேற்றித்தர அந்த வல்ல நாயனே போதுமானவன்.

ஸஹர் உணவு உண்ணுதல்
1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்,
இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக் கின்றான். மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ஸஹர் உணவை உண்ணுங்கள். நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்ததோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட வர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது ‘வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்’ இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!

1) நான் நபி(ஸல்)அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபியவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி)அவர்கள் கூறினார்கள்.ஸுப்ஹுடைய பாங்குக்கும் ஸஹர் உணவுக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ்(ரலி)அவர்கள் கேட்டதற்கு ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை பிற்படுத்துவது சுன்னத்தாகும். அதாவது ஸஹர் உணவுக்கும் சுப்ஹுடைய பாங்குக்கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது சுப்ஹுடைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாது.

6. ஸகாத்துல் ஃபித்ர்;
1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக’ கொடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியுள்ளார்கள். மேலும் இத்தர்மத்தைஇ பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரிஇ முஸ்லிம்)
2) நோன்பில் நpகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: அபூதாவூத்இ நஸயீ)
4) நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி ‘தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் இத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது.
இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக ‘தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்.
‘ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!

சட்டங்கள்
கடமை: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியயோர், பெரியயோர் ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பீன் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.

ஃபிதர் ஸகாத்தின்அளவு
இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு ”முத்து’ எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ”ஸாவு’ எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும். எனினும் மார்க்க மேதைகள் 2 கிலோ.40 கிராம் எடை என வகுத்துள்ளனர்.

ஃபித்ரா கொடுக்கும் நாள்
இத்தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.என இப்னு உமர்(ரலி) கூறியதாக இமாம் நாஃபிஹ் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

ஃபித்ருப்பெருநாள்.
1. நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதீ)
2) பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் ஒருவழியாகச்சென்று மறுவழியாக திரும்புபவாகளாக இருந்தார்கள்.
4) நபி(ஸல்) அவர்கள் அன்று அதிகாலையிலிருந்து தொழுகை முடிவது வரை தக்பீர்; சொல்லிக்nhண்டிருப்பார்கள்.
‘அல்லாஹு அக்பர், அல்லாஹ் அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலிலல்லாஹில் ஹம்து’ என்று தக்பீர் கூறுவதே ஆதாரபபூர்வமான ஹதீஸாகும்.
.நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா.
4) நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்:நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும்.

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும். இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஈதுத் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ கிடையாது. ஈதுத் தொழுகைக்கு முன் பின் சுன்னத்தும் கிடையாது.

மூலம் : http://albaqavi.com/?p=735

No comments:

Post a Comment