Sunday, July 26, 2015

தோள் கொடுத்த நபிகள் நாயகம் : பிறருக்கு உதவி செய்வதில் முன்மாதிரி..!

மக்காவின் வெற்றிக்கு பின்னர் ஒருநாள் நபி [ஸல்] அவர்களிடம் ஒருவர் வருகைதந்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை எனக்கு இருக்க ஓர் இடமில்லை என முறையிட்டு நின்றார்.
நபி [ஸல்] அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள், 'இதோ! இந்த இடத்தில் நீர் உமக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளும்'' எனக்கூறினார்கள் . கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த ஏழை மனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்ப முனைந்தபோது மண்குழைத்துக் கொடுத்தார்கள் வாழ்விக்க வந்த மாநபி [ஸல்] அவர்கள்.
சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. வீட்டிற்கு முகடு அமைத்திடும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். அது உயரமாக இருந்ததால் எட்டவில்லை . இதனைக்கண்ட நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் ,'நண்பரே! நான் கீழே அமர்ந்து கொள்கிறேன் நீர் என் தோள்மீது ஏறி முகடு அமைத்துகொள்ளும்'' என்றார்கள்.
அண்ணலாரின் மொழிகேட்டு அதிர்ந்து போன அத்தோழர் , '' என்ன தங்களின் புனிதமிகு தோள்களின் மீது ஏரியா நான் என் வீட்டிற்கு முகடு அமைத்துக் கொள்வது? எனக்கு வீடே வேண்டாம் .'' என அழுதவர்க் கூறலுற்றார்.
நபி [ஸல்] அவர்கள் அவரைச் சமாதானம் செய்து தம்புனித தோள்களில் ஏறி முகடு அமைத்துக் கொள்ள உதவினார்கள். அவரோ வேண்டாவெறுப்புடன் கண்ணீர் சிந்தியவாறு தோளின் மீதேறி முகடு அமைத்தார்.
உண்டா இப்படி ஒரு வரலாற்று நிகழ்ச்சி மற்றவர் வாழ்க்கையில்..??
நாட்டில் எத்துணையோ தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் , மக்களுக்கு தம் தோள் கொடுத்த தலைவர் உண்டா?
நபிகளாரின் வழிமுறையை பின்பற்றுபவர்கள்
நம்மில் எத்துணைபேர்கள் இருக்கின்றனர்? உண்ணும்போது, குடிக்கும்போது, உறங்கும்போது, சிறுநீர் கழிக்கும்போது இன்னும் பிறவற்றில் பேணுதலாவது கடைபிடிக்கப்படுகிறதா?

No comments:

Post a Comment