Sunday, July 26, 2015

தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!

தொழுகை:
'நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859
தொழுகையில் மறதி ஏற்படுவதும் அதற்கு(ப் பரிகாரமாக) சஜ்தாச் செய்வதும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால் அவரிடம் ஷைத்தான் வந்து, அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டால் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:முஸ்லிம் 984

தொழக் கூடாத நேரங்கள்:
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம் எனவும் இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் எனவும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை
சூரியன் உச்சிக்கு வந்தது முதல் சாயும் வரை
சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிருந்து நன்கு மறையும் வரை
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1511
'ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 394


💦
💦💦தூய்மையின்றி தொழுகை இல்லை💦💦💦

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுவதற்காக நிற்க நாடினால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையூம், கைகளை முழங்கை வரையூம் கால்களை கணுக்கால்கள் வரையூம் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 05:06)
உளூ செய்தோரின் முகம், கை, கால் ஆகியன (மறுமையில்) பிரகாசிக்கும்.அத்தகைய ஒழுவை நாம் முறையாக செய்ய வேண்டும்.

💧ஒழு செய்யும்போது கவனம் தேவை💧
நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் ஒழுச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்)‪#‎குதிங்கால்களைச்_சரியாகக்_கழுவாதவர்களுக்கு_நரகம்_தான்‬!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்:புஹாரி 60

No comments:

Post a Comment