அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்
பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.
ஆதாரம் : முஸ்லிம்
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஜுபுனி வஅவூது பி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி(க்)க மின் ஃபித்னதித் துன்யா வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ரிஆதாரம் : முஸ்லிம்
பொருள் : இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி
ரப்பி கினீ அதாப(க்)க யவ்ம தப்அஸு இபாத(க்)க
பொருள் : என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம்
No comments:
Post a Comment