Sunday, September 11, 2016

கஃபாவின் மீது போர்தப்படும் போர்வை

கஃபாவின் மீது போர்தப்படும் போர்வைக்கு பெயர் -
கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிறபோர்வைக்கு " கிஸ்வா " என்று பெயர் சொல்லப்படும். தங்க ஜரிகைகலால் ஆனது ,
கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது
எப்போது மாற்றப்படும்-வருடந்தோறும்துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வையை மாற்றப்படுகிறது,
பழைய போர்வை --பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாகவெட்டப் பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கலிஃபா உமர்[ ரலியல்லாஹூ அன்ஹூ ] ஆட்சி காலத்தில்அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
14 -மீ-நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.
இந்த போர்வையின் நீளம் -658 ச.மீ ஆகும் 670-கிலோ பட்டு நூலும் 15 கிலோ அசல் தங்க ஜரிகை இழைகள் பயன்படுத்தப்படுகிறது .
இதற்காக ஆகும் செலவு சவுதி ரியால் -1கோடியே 70-லட்சம் என்று சொல்லப்படுகிறது.
அது இந்தியா ரூபாய் சுமார் 20-கோடியைஆகும்.
தொடும்போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் கலைநயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன .
கிஸ்வாவின் நிறம் ஒவ்வொரு ஆட்சியாளர் காலங்களில் ,ஒவ்வொரு நிறத்திலும் இருந்திருக்கிறது .
ஆரம்பகாலங்களில் இந்த போர்வை மாற்றும் வைபவம்.
முஹர்ரம்-10-ஆம்நாள் நடை பெற்றது, பிறகுதான்
துல்ஹஜ் மாதம் 9ஆம் நாள் அரஃபா நாளன்று பஜ்ர் தொழுகைக்கு பின்பு மாற்றுவார்கள் இதை சவூதி குர்ஆன் தொலைக்காட்சியில் நேரலை செய்வார்கள் இவ்வாண்டு மாற்றும்போது வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்
இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment