Sunday, September 11, 2016

அரஃபா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே
வருகின்ற(13.09.2016) துல்ஹஜ் பிறை 10 வியாழக்கிழமை அன்று இரு சிறந்த பெருநாட்களில் ஒரு பெருநாளான ஈதுல் அல்ஹாவினை கொண்டாடவிருக்கிறோம்
💥அல்ஹம்துலில்லாஹ்💥
இதற்கு முந்தைய நாள் (12.09.2016)துல்ஹஜ் பிறை 9 அன்று அரஃபா நோன்பு என்ற சுன்னத்தான அமலினை நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்துள்ளார்கள்
இந்த நோன்பு மற்ற நாட்களில் நாம் நோற்கும் நோன்பினை போன்று கிடையாது
அரஃபா நோன்பு தனிச்சிறப்பு பெற்றது

இந்த நோன்பினை நாம் நோற்பதினால் நாம் முந்தைய ஒரு ஆண்டு செய்த பாவமும் இனிமேல் வரும் ஒரு ஆண்டின் பாவங்களும் மன்னிக்கப்படும்
💥அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல் : முஸ்லிம் 1976💥
இப்படிப்பட்ட அதிக நன்மைகளை தரக்கூடிய ஒரு அமலினை நம் மக்கள் சர்வசாதாரணமாக அலட்சிய படுத்துகின்றனர்
இந்த நோன்பினை நாம் நோற்காமல் இருப்பதினால் நாம் அடையும் நஷ்டத்தினை யாராவது சிந்தித்து பார்த்தோமா
நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படாமல் இருந்தால் அதற்கான தண்டனையாக நாம் நரகத்தில் வேதனை அளிக்கபடுவோம் என்பதை நாம் அறிந்திருக்கவில்லையா
💥அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 4:17)💥
மேலும் ஒரு செய்தி அதாவது குர்பானி கொடுப்பவர்கள் மட்டும் தான் நோன்பு என்ற எண்ணமும் நம்மில் பலருக்கு ஏற்பட்டு நம்மில் பலர் குர்பானி கொடுப்பவர்களை தவிர வேறு யாரும் அரஃபா நோன்பினை நோற்பதில்லை
இது தவறானதாகும்
துல்ஹஜ் பிறை 9 அன்று மஸ்ஜிதுல் ஹரமில் ஹஜ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் அரஃபா நோன்பு நோற்பது தடையாகும்
இவர்களை தவிர மற்ற அனைவரும் அரஃபா நோன்பினை நோற்பது சுன்னத்தான அமலாகும்
நம்முடைய முன் பின் ஒரு ஆண்டின் பாவங்களை மன்னிக்க கூடிய அரஃபா நோன்பினை அல்லாஹ்வின் நாட்டத்தோடு நம் அனைவரும் அரஃபா நோன்பினை நோற்று அதனுடைய முழு நன்மையையும் அடைவோமாக
அல்லாஹ் நம் அனைவருக்கும் அரஃபா நோன்பினுடைய முழு நன்மையையும் வழங்குவானாக
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

No comments:

Post a Comment