அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...
கோடான கோடி செல்வத்திற்க்கும் இணை இல்லாத எங்கள் நபிகளாரின் புன்னகை ஒரு தொகுப்பு...
உங்களுக்காகவே இப்பதிவில்...
''உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)
"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்" - அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (திர்மிதி 2022, 2037)
"நபி(ஸல்) அவர்கள் ஒரேயடியாக தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்க நான் இதுவரை கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள்" - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரி)
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: "நான் இஸ்லாத்தை ஏற்ற கணத்திலிருந்து புன்னகை பூக்கும் முகம் தவிர வேறெதையும் நான் நபியவர்களிடம் கண்டதில்லை. அவர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் மெல்லிய புன்னகை பூப்பதைக் கண்டுள்ளேன். (புகாரி)
என் வாழ்நாளில் நபியவர்கள் அளவிற்குப் புன்னகை பூத்த இன்னொருவரை நான் கண்டதேயில்லை என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு ஹாரித் (திர்மிதி)
நீங்கள் விரும்பிய ஒன்றை உங்கள் சகோதரருக்காக விரும்பாத வரையில் ஒருவர் உண்மையாளராக மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (சஹீஹ் புகாரி & முஸ்லிம்)
பொன்முகத்துடன் சிரிப்பது கூட நபிகளார் காட்டித்தந்த வழிமுறையாகும்...
கடைபிடிப்போம்!
இன் ஷா அல்லாஹ்.!!
No comments:
Post a Comment