Friday, December 16, 2016

இஸ்லாமிய நோக்கில் "ஸுஹ்த் " என அழைக்கப் படும் துறவு நிலையின் நோக்கம் முற்றிலும் உலக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி , வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு விலகி நிற்பதல்ல ; தஸவ்வுப் என்பது செயலின்மை, அசைவற்றநிலை , உழைப்பின்மை ஆகியவற்றைப் போதிக்கும் துறவறக் கோட்பாடுமல்ல ; தஸவ்வுப் எனும் ஆத்மீகக் கோட்பாட்டின் இலட்சியம், உள்ளத்தின் கீழான உணர்ச்சிகளுக்கேதிராக போராடி அதனை அடிமைப்படுத்தி இறை நேசம் , உலக வாழ்க்கையைத் துச்சமாக மதிக்கும் மனநிலை, வீராவேசத்தோடு போராடும் உடல் வலிமை, மனப்பக்குவம் இஸ்லாமிய தஹ்வா பணியில் உற்சாகத்தோடு ஈடுபடும் மனோநிலை போன்றவற்றை மனிதருள் ஏற்படுத்தி அவர்களை பூரண மனிதனாக மாற்றுவதேயாகும் . இஸ்லாமிய வரலாற்றில் எழுந்த மகத்தான ஜிஹாத் இயக்கங்கள் (தற்போது " ஜிஹாத்" எனும் போர்வையில் இஸ்லாமிய கோட்பாடை மீறும் இயக்கங்கள் போலல்லாத ) எல்லாம் அவற்றின் பின்னணியில் ஓர் ஆத்ம ஞானியின் ஆளுமையின் தூன்டுதலை பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது. முஸ்லிம் உம்மத்தின் எதிர்காலம் அந்தரத்தில் ஊசலாடிய காலகட்டத்தில் ஆத்ம ஞானிகளே புத்துயிர் அளித்தனர். இஸ்லாமிய ஆட்சியை ஆட்டங்கானச் செய்த மங்கோலிய தத்தாரிய படை எடுப்பைத் தொடர்ந்து அவர்களின் தலைவனை ஆத்மீக இஸ்லாம் அரவணைத்த பின்பு முழு மங்கோலிய இனமே இஸ்லாத்தைத் தழுவியது சூபி ஞானிகளாலே என்பது இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை ! இதுபோன்று ஆரம்ப காலத்தில் பைசாந்திரிய பேரரசுக்கேதிரான போராட்டம், ஆப்கானிய முஜாகிதீன்களின் போராட்டம், சோவியத் ரஷ்யாவின் கம்யுனிச நாத்திகவாதத்துக்கேதிரான போராட்டங்களில் சூபி ஞானிகளின் பங்களிப்பு மிக மகத்தானது. .

இஸ்லாமிய நோக்கில் "ஸுஹ்த் " என அழைக்கப் படும் துறவு நிலையின் நோக்கம் முற்றிலும் உலக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி , வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு விலகி நிற்பதல்ல ;
தஸவ்வுப் என்பது செயலின்மை, அசைவற்றநிலை , உழைப்பின்மை ஆகியவற்றைப் போதிக்கும் துறவறக் கோட்பாடுமல்ல ;

தஸவ்வுப் எனும் ஆத்மீகக் கோட்பாட்டின் இலட்சியம், உள்ளத்தின் கீழான உணர்ச்சிகளுக்கேதிராக போராடி அதனை அடிமைப்படுத்தி இறை நேசம் , உலக வாழ்க்கையைத் துச்சமாக மதிக்கும் மனநிலை, வீராவேசத்தோடு போராடும் உடல் வலிமை, மனப்பக்குவம் இஸ்லாமிய தஹ்வா பணியில் உற்சாகத்தோடு ஈடுபடும் மனோநிலை போன்றவற்றை மனிதருள் ஏற்படுத்தி அவர்களை பூரண மனிதனாக மாற்றுவதேயாகும் .
இஸ்லாமிய வரலாற்றில் எழுந்த மகத்தான ஜிஹாத் இயக்கங்கள் (தற்போது " ஜிஹாத்" எனும் போர்வையில் இஸ்லாமிய கோட்பாடை மீறும் இயக்கங்கள் போலல்லாத ) எல்லாம் அவற்றின் பின்னணியில் ஓர் ஆத்ம ஞானியின் ஆளுமையின் தூன்டுதலை பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.
முஸ்லிம் உம்மத்தின் எதிர்காலம் அந்தரத்தில் ஊசலாடிய காலகட்டத்தில் ஆத்ம ஞானிகளே புத்துயிர் அளித்தனர்.
இஸ்லாமிய ஆட்சியை ஆட்டங்கானச் செய்த மங்கோலிய தத்தாரிய படை எடுப்பைத் தொடர்ந்து அவர்களின் தலைவனை ஆத்மீக இஸ்லாம் அரவணைத்த பின்பு முழு மங்கோலிய இனமே இஸ்லாத்தைத் தழுவியது சூபி ஞானிகளாலே என்பது இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை !
இதுபோன்று ஆரம்ப காலத்தில் பைசாந்திரிய பேரரசுக்கேதிரான போராட்டம், ஆப்கானிய முஜாகிதீன்களின் போராட்டம், சோவியத் ரஷ்யாவின் கம்யுனிச நாத்திகவாதத்துக்கேதிரான போராட்டங்களில் சூபி ஞானிகளின் பங்களிப்பு மிக மகத்தானது. .

No comments:

Post a Comment